Tuesday, April 21, 2009

vivek

[ செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2009, 09:21.50 AM GMT +05:30 ]


ஈழமக்களுக்காக பெண்கள் உண்ணாவிரதம் 9 வது நாளாக நீடிப்பு:

நடிகர் விவேக் வாழ்த்து


இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும் உடனடியாக போரை நிறுத்தும்படி சோனியாகாந்தியை வலியுறுத்தியும் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. அலுவலக வளாகத்தில் இன்று 9 வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது.

சாகும்வரை உண்ணா விரதம் இருக்கும் 20 பெண்களில் பலர் சோர்வாக காணப்பட்டனர். அவர்கள் பாயை விரித்து படுத்துக் கிடந்தனர். மருத்துவமனைக்கு செல்லவும் மறுத்து விட்டனர். உண்ணாவிரதம் இருந்த பெண்களை நடிகர் விவேக் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது




தமிழர்கள் ஈழ மண்ணில் படும் கஷ்டத்துக்காக நீங்கள் நடத்தும் போராட்டம் போற்றத்தக்கது. பொதுவாக பெண்மை வணங்கத்தக்கது. குழந்தைகள் பட்டினி கிடந்தால் கூட பெண்கள் தாங்கிக் கொள்ளமாட்டார்கள். தங்கள் குழந்தைகளையும் நினைக்காமல் இலங்கை தமிழர்களுக்காக பட்டினி போராட்டம் நடத்துவது நெகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர்கள் சார்பில் நன்றி கூறுகிறேன். நீங்கள் செய்திருப்பது மிகப்பெரிய தியாகம். ஒவ்வொரு தமிழர்களின் உணர்வையும் செயலாக்கி இருக்கிறீர்கள். எதையும் எதிர்பார்க்காமல் தியாக உணர்வோடு போராட்டம் நடத்துகிறீர்கள். இதன் மூலம் தமிழர்கள் வாழ்வில் விடியல் ஏற்படுமானால் அதற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். எந்த கட்சி சார்பும் இல்லாமல் தமிழர் என்ற முறையில் எனது ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு என்றார். பின்னர் உண்ணாவிரதம் இருந்த பெண்களுக்கு ஒரு அட்டைப்பெட்டி நிறைய தண்ணீர் பாட்டில்கள் வாங்கி கொடுத்தார்.

thanks..www.tamilwin.com

No comments: