முதல்வன் பாணியில் ஜே.கே.ரித்திஷ் !
முதல்வன் அர்ஜூன் பாணியில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நடிகர் ஜே.கே.ரித்திஷ் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். ராமநாதபுரத்தில் லோக்கல் டி.வி., சேனல் ஒன்றில் 3 மணிநேரம் லைவ்வாக பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். ரித்திஷிடம் போனில் பேசிய பொதுமக்கள், இலவச தொலைக்காட்சி கிடைக்கவில்லை என்பதில் தொடங்கி, மின்சார பிரச்னை, தண்ணீர் பிரச்னை, சாலை வசதி என பல பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போனார்கள். ரித்திஷூம் சளைக்காமல்அனைவருக்கும் பதில் சொன்னதுடன் நிற்காமல், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் போனில் பேசினார்.
ரித்திஷின் இந்த அதிரடி நடவடிக்கை ராமநாதபுரம் தொகுதி மக்களை கவர்ந்தது. இதனை பலரும் போனில் தெரிவித்தார்கள். இதையடுத்து தொடர்ந்து மாதந்தோறும் பொதுமக்களுடன் இதுபோன்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக தெரிவித்தார்.
சினிமா துறையில் இருந்து எம்.பி.,யான ஜே.கே.ரித்திஷ், சினிமா பாணியிலேயே மக்களுக்கு தேவையான வசதிகளை அதிரடியாக செய்து கொடுக்கிறார்
நன்றி : அலைகள் இணையம்
Monday, June 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment