டெல்லி: சாப்ட்வேர் தொழில்நுட்ப பூங்காங்களுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை அளிக்கட வேண்டும் என்று தொலைத் தொடர்பு மற்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாகமன்மோகன் சிங்கை சந்தித்து அவர் வேண்டுகோள் விடுத்தார்.
சாஃப்ட்வேர் தொழில்நுட்ப பூங்கா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வரிச் சலுகை காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்டது. இதையடுத்து வரிச் சலுகை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.
ஆனால், அதற்குப் பிறகு வரிச் சலுகை ரத்தாகலாம் என்று கருதப்பட்டது. சர்வதேச பொருளாதார மந்த நிலையால் சாப்ட்வேர் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வரிச் சலுகை ரத்தானால் அந்தத் துறை மேலும் சிக்கல்களை சந்திக்கும் என்று கருதப்படுகிறது.
இந் நிலையில் பிரதமரை சந்தித்த ராஜா மேலும் 3 ஆண்டுகளுக்கு வரிச் சலுகையை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஐ.டி. நிறுவனங்களுக்கு வரிச் சலுகையை நீட்டிப்பதால் ஏற்படும் பலன்களை அவர் பிரதமரிடம் விளக்கினார்.
மேலும் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்படும் முன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து வரிச் சலுகை குறித்துப் பேசவுள்ளதாகவும் ராசா கூறினார்.
THANKS :WWW.THATSTAMIL.ONEINDIA.COM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment