நேற்று பல பக்கங்களில்
பெண்ணியம் குறித்து
.
எங்க வீட்டுல எல்லா முடிவும் அம்மாதான்
ஆனா மத்தவங்களுக்கு முன்ன
அய்யய்யோ அவருக்கு தெரிஞ்சா சத்தம் போடுவாரு
அவருகிட்டையும் ஒருவார்த்தை சொல்லிருங்க
ஒரு பத்து நிமிஷம் பொறுங்க இந்தா வந்துருவாரு
பார்த்துட்டே போயிருங்க
.
இதான் அம்மா
.
இடுப்பு வலின்னு சொன்னாரு முடக்கத்தான் பறிச்சிட்டு வாடா தம்பி
இதான் அம்மா
.
இவங்ககிட்ட போயிட்டு பெண்ணியம் பேச தேவையே இல்ல
இந்தாடா தம்பி இந்த காசை அம்மாகிட்ட குடு
.
ஏம்மா நீ சாப்பிட்டியா
ஏண்டா சட்டைய நீ தொவச்சா என்ன அவ சீக்காளி பாவம்ல
இந்த கரிசனை அப்பா
.
எங்களுக்கு
இந்த பெண்ணியம்
அன்பு போதும்
.
பெண்ணியம் பேருல இங்கிலீஸ் பேசணும்
தொப்புள் தெரிய உடுப்பு போட்டு
அக்குள் தெரிய பிளவுஸ் போட்டு
மார்பை தூக்கி கட்டி
.
அடுத்த பெண்களும் இப்புடித்தான் இருக்கனும்னு
எவனோ ஒரு லூசு சொன்னா
அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை
.
பெண்மை ஓர் அற்புதமான விடயம்
.
அடுத்த பொம்பள உடம்பை ரசிக்கணும்னு இருக்குற
பரதேசிகள்தான்
பிரா தெரியிற மாதிரி போடு
பேன்ட்டி தெரியிற மாதிரி போடு
அதான் பெண்ணியம்னு உசுப்பேத்துவான்.....
.
தலைவர் பிரபாகரன் மிகச்சிறந்த ஆளுமை உள்ளவர்
.
அவர் பெண்களை மிக உயர்ந்த லட்சியத்தோட
உயர்த்தி போரில்
கடலில் ஆயுத பயன்பாடுகளில்
வங்கி பொருண்மியம் வேவு
பனைமரங்களை சுமக்கும் அளவு
உடல் தைரியம்
இன்னும் எவ்வளவோ கற்றுக்கொடுத்த
சிறந்த முன்னோடி அவரே
.
கர்ப்பப்பை எடுத்தா
நீ பெண்ணியவாதி
அப்புடின்னு சொல்லல
.
நம்ம வீட்டு பொண்ணுங்க மேல
எதுக்கு இவ்ளோ அக்கறை இவனுங்களுக்கு
வேற ஒன்னும் இல்ல
.
பெண்களை சீரழித்தால்
அந்த இனத்தை சீரழிக்கலாம்
.
ஆம்பள போல வேஷம் கட்டுனா
சமமாஆயிருவாங்கன்னு சொல்லுறது
எவ்ளோ பெரிய அபத்தம்
.
ரகுநந்தன் வேளமாலிகிதன்
11 அக்டோபர், 2017 · Sydney, நியூ சவுத் வேல்ஸ், அவுஸ்ரேலியா
No comments:
Post a Comment