Friday, August 15, 2025

உண்மையான சுதந்திர தினம் என்று!?

 சுயசாதியே சுயசாதியை

சுரண்டி கொழுக்கும்.
.............

..................
(1) 1950-அன்று சாதி ரீதியாக இட ஒதுக்கீடு செய்தது சரியானது தான்.
.
(2) ஆனால் 2023-ல் இது சரியா என்றால்; இல்லை என்று தான் எனது பதில் ஆகும்.
.
(3) ஒரு வீட்டில் அரசு வேலை பார்க்கும் அண்ணன் மகனும்...
.
சுய தொழில் பார்க்கும் தம்பி மகனுமே சமம் இல்லை.
அப்படி இருக்கும் போது ஒரே சமூகம் அல்லது 50சமூகம் அல்லது 100சமூகம் எப்படி ஒரே பிரிவில் சமமான நிலையில் இருக்கும்?
.
(4) எனது மகனும் திண்டுகல் சீனிவாசன் மகனும் ஒன்றா?
.
எடப்பாடி மகனும் ஒரு ஏழை கவுண்டர் மகனும் ஒன்றா?
ராமதாஸ் மகனும் ஒரு ஏழை வன்னியர் மகனும் ஒன்றா?
(5) தற்போது உள்ள இட ஒதுக்கீடு படி டாக்டர் மகன் டாக்டர் ஆவான். கலெக்டர் மகன் கலெக்டர் ஆவான். போலீஸ் மகன் போலீஸ் ஆவான். வாத்தியார் மகன் வாத்தியார் ஆவான்.
.
(6) தற்போது உள்ள முறை படி இட ஒதுக்கீட்டை அனுபவித்தவன் மட்டுமே மீண்டும் அனுபவிப்பான்.
.
(7) எனவே பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடே சரி ஆகும்.
.
(😎 A. 10லட்சம் கீழ் உள்ளவர்கள்.
B. 10லட்சம் முதல் 50லட்சம் உள்ளவர்கள்.
C. 50லட்சம் முதல் 1கோடி உள்ளவர்கள்.
D. 1கோடி முதல் 2கோடி உள்ளவர்கள்.
E. 2கோடி முதல் 5கோடி உள்ளவர்கள்.
F. 5கோடி முதல் 10கோடி உள்ளவர்கள்.
G. 10கோடி முதல் 20கோடி உள்ளவர்கள்.
H. 20 கோடி முதல் 50கோடி உள்ளவர்கள்.
I. 50கோடி முதல் 100கோடி உள்ளவர்கள்.
J. 100கோடிக்கு மேல் உள்ளவர்கள்.
இது போன்ற 10பிரிவில் இட ஒதுக்கீடு கொடுத்தால் அனைவருக்கும் சமமாக கிடைக்கும்.
(9) மேலே உள்ளவர்களின் மக்கள் தொகை எண்ணிக்கை ஏற்ப பொருளாதார இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.
(10) வங்கி, பத்திர ஆபிஸ், விஏஓ ஆபிஸ், நகராட்சி இவை நான்கு துறை மூலம் ஒருவர் சொத்தை எளிதாக கணக்கிடலாம்.
(11) இது போன்று பொருளாதார பிரிவு படி என்று இட ஒதுக்கீடு செய்கிறார்களோ...
அன்று தான் உண்மையான சுதந்திர தினம்.
.
அன்று வரை
சுயசாதியே சுயசாதியை
சுரண்டி கொழுக்கும்.
=======================
A Senthilkumar
புள்ளிவிவரங்களையும் விளம்பரங்களையும் காண்க
எல்லா உணர்ச்சிகளும்:
A Senthilkumar

No comments: