'அனில் அம்பானி 'கொலை முயற்சி'
வழக்கில் புது திருப்பமாக ஏர் வொர்க்ஸ் நிறுவனத்தின் இரு ஊழியர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களின் பெயர் பால்ராஜ் தேவர் மற்றும் உதய் வாரேகர். இந்த இருவரும் ஏர் வொர்க்ஸின் தொழில்நுட்ப உதவியாளர்கள்
அம்பானியின் ஹெலிகாப்டரில் சிறு சிறு கூழாங்கற்களைக் கொட்டியதில் இந்த இருவருக்கும் முக்கியப் பங்கு இருக்கும் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருப்பதா மும்பை குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனத்திலிருந்து நேற்று நீக்கப்பட்ட விஜய் பட்னாகர் என்பவரையும் விசாரித்துள்ளது போலீஸ். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாகக் கருதப்பட்ட பரத் போர்ஜ் சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதே நிறுவனத்தின் மேலும் இரு ஊழியர்கள் கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருவாரங்களுக்கு முன் அனில் அம்பானி வழக்கமாகப் பயணிக்கும் ஹெலிகாப்டர், வழக்கமான பணிகளுக்காக ஏர்வொர்க்ஸ் நிறுவன வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த ஹெலிகாப்டரை இயக்க முற்படும்போது, அதன் பெட்ரோல் டேங்கில் கூழாங்கற்கள் மற்றும் மணல் கொட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வருகிறது போலீஸ்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment