Tuesday, May 5, 2009

த‌மிழக‌த்து‌க்கு சோ‌னியா வரு‌ம் நா‌ள் து‌க்க நா‌ள் : பாரதிராஜா

இலங்கை பிரச்சனையில் மவுனம் சாதித்து வரும் சோனியாகாந்தி சென்னைக்கு ஓட்டு கேட்டு வரும்போது வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றுங்கள் என்று கூ‌றிய இய‌க்குன‌ர் பாரதிராஜா, சோனியா த‌மிழக‌த்து‌க்கு வரும்நாள் துக்க நாள் எ‌ன்று ஆவேசமாக பே‌சினா‌ர்.

திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பு திரைப்பட இய‌க்குன‌ர் பாரதிராஜா தலைமையில் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது என்று பிரசாரம் செய்யவது என்று இந்த இயக்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.அதன்படி நேற்‌றிரவு ஈரோடு ம‌க்களவை‌த் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக பிரசார கூட்டம் நடத்தப்பட்டது. ஈரோடு பெரியார் நகரில் நடந்த கூட்டத்துக்கு இய‌க்குன‌ர் பாரதிராஜா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகை‌யி‌ல், டெல்லி அரசு எனக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தது. பத்மஸ்ரீ பாரதிராஜாவா? தமிழன் பாரதிராஜாவா? என்ற கேள்வி வந்தபோது, தமிழன் பாரதிராஜா என்கிற பெருமை மட்டும் போதும் என்று முடிவு செய்தேன். தமிழன் என்பதற்கு இணையான வேறு பட்டமே கிடையாது.பாரதிராஜா யார் என்று வயலார் ரவிக்கு தெரியுமா? என்கிறார் இளங்கோவன். அவருக்கு தெரியுமா? நானும் வயலார் ரவியும் 25 ஆண்டுகால நண்பர்கள் என்று.
முத்துக்குமாரை தெரியாது என்கிறார். முத்துக்குமாரை தெரியாமல் தமிழன் இருக்கலாமா? அவருக்கு ஓடுவது தமிழ் ரத்தமா?.தனி ஈழம் என்று யார் குரல் கொடுத்தாலும் அவர்களை வாழ்த்துகிறோம். துரோகிகளை நாங்கள் அடையாளம் காட்டுகிறோம். நல்லவர்களை தேடிக்கொள்ளுங்கள்.16 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இப்போது புரட்சியை தொடங்கி இருக்கிறோம்.
இன்னும் 10 நாட்களில் தேர்தலில் அது பிரளயமாக மாறவேண்டும்.ஓட்டு கேட்க சோனியா வரக்கூடாது. அப்படி அவர் 6ஆ‌ம் தேதி சென்னைக்கு வந்தால் மிக பலத்த எதிர்ப்பு காட்ட வேண்டும்.

தாய்மார்களே பொதுமக்களே நீங்கள் உங்கள் வீடுகளில் கறுப்பு துணியை கட்டுங்கள். சிறு கறுப்பு துணியை அணிந்து கொள்ளுங்கள். யாராவது கேட்டால் சோனியா வரும்நாள் எங்கள் துக்க நாள் என்று கூறுங்கள் எ‌ன்று பாரதிராஜா பேசினார்.கூட்டத்தில் இயக்குனர்க‌ள் சீமான், ஆர்.சுந்தரராஜன், கவுதமன், ஆர்.கே.செல்வமணி உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக 'சீனாவின் முற்றுகையில் இந்தியா' என்ற புத்தகத்தை இயக்குனர் பாராதிராஜா வெளியிட்டார்.
thanks
www.yarl.com

No comments: