Thursday, June 11, 2009

ஐ.டி. நிறுவனங்களுக்கு மேலும் 3 ஆண்டுக்கு வரி சலுகை: ராசா பரிந்துரை

டெல்லி: சாப்ட்வேர் தொழில்நுட்ப பூங்காங்களுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை அளிக்கட வேண்டும் என்று தொலைத் தொடர்பு மற்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாகமன்மோகன் சிங்கை சந்தித்து அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சாஃப்ட்வேர் தொழில்நுட்ப பூங்கா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வரிச் சலுகை காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்டது. இதையடுத்து வரிச் சலுகை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

ஆனால், அதற்குப் பிறகு வரிச் சலுகை ரத்தாகலாம் என்று கருதப்பட்டது. சர்வதேச பொருளாதார மந்த நிலையால் சாப்ட்வேர் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வரிச் சலுகை ரத்தானால் அந்தத் துறை மேலும் சிக்கல்களை சந்திக்கும் என்று கருதப்படுகிறது.

இந் நிலையில் பிரதமரை சந்தித்த ராஜா மேலும் 3 ஆண்டுகளுக்கு வரிச் சலுகையை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஐ.டி. நிறுவனங்களுக்கு வரிச் சலுகையை நீட்டிப்பதால் ஏற்படும் பலன்களை அவர் பிரதமரிடம் விளக்கினார்.

மேலும் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்படும் முன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து வரிச் சலுகை குறித்துப் பேசவுள்ளதாகவும் ராசா கூறினார்.
THANKS :WWW.THATSTAMIL.ONEINDIA.COM

Monday, June 8, 2009

முதல்வன் பாணியில் ஜே.கே.ரித்திஷ் !

முதல்வன் பாணியில் ஜே.கே.ரித்திஷ் !


முதல்வன் அர்ஜூன் பாணியில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நடிகர் ஜே.கே.ரித்திஷ் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். ராமநாதபுரத்தில் லோக்கல் டி.வி., சேனல் ஒன்றில் 3 மணிநேரம் லைவ்வாக பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். ரித்திஷிடம் போனில் பேசிய பொதுமக்கள், இலவச தொலைக்காட்சி கிடைக்கவில்லை என்பதில் தொடங்கி, மின்சார பிரச்னை, தண்ணீர் பிரச்னை, சாலை வசதி என பல பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போனார்கள். ரித்திஷூம் சளைக்காமல்அனைவருக்கும் பதில் சொன்னதுடன் நிற்காமல், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் போனில் பேசினார்.

ரித்திஷின் இந்த அதிரடி நடவடிக்கை ராமநாதபுரம் தொகுதி மக்களை கவர்ந்தது. இதனை பலரும் போனில் தெரிவித்தார்கள். இதையடுத்து தொடர்ந்து மாதந்தோறும் பொதுமக்களுடன் இதுபோன்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக தெரிவித்தார்.

சினிமா துறையில் இருந்து எம்.பி.,யான ஜே.கே.ரித்திஷ், சினிமா பாணியிலேயே மக்களுக்கு தேவையான வசதிகளை அதிரடியாக செய்து கொடுக்கிறார்
நன்றி : அலைகள் இணையம்
கேள்வி : முன்பிருந்த இலங்கை அழிவுற்றதென உரையாசிரியர் கூற்றை எடுத்துரைக்கும் தாங்கள் அதற்குரிய மூலச்சான்றை கூற்முடியுமா? ப்தில் : முடியும். சிவதருமோத்தரம் என்னும் சைவவுபாகமத்தில் பொதிகைககுத் தென்பால் மாமேரு (மகேந்திர) மலை தெற்கு முதல் வடக்கு ஈறாக இருந்ததென்றும் அதன் அடிவாரத்தின்கண் இருந்த தேஎம் பொன்மயமான இலங்கை என்னும் பகுதியினை சுட்டிக்காட்டும் மூலபாடம் "துங்கமலி பொதித்தென்பாற் றுடர்ந்த வடிவாரத்தின் அங்கனக விலங்கையுமேழ் வரைச்சார லடித்தேசம்" என்பதாகும். கேள்வி : தமிழ் ஈழத்தின் எதிர்காலம் என்ன? பதில் : பொற்காலம். தருமந்தன்னை சூது கவ்வும் முதலில்; முடிவில் தருமம் வெல்லும் என்னும் கீதையின் பொன்மொழியினை படிப்போர் இதன் உண்மை சாரத்தை மறுக்க முடியாது

080620091

கேள்வி: தாங்கள் எடுத்துரைக்கும் நாடுகள் முழுமையாக கடல் கொண்டிருக்கக்கூடும் என்று கருதுகிறீர்களா? அல்லது அதன் எஞ்சிய பகுதி உள்ளன சில என்று கருதுகிறீர்களா?

பதில் : கடல் கோளுக்கு இரையானது போக எஞ்சிய பகுதிகள் சில உள்ளன என்று கூறலாம்.

கேள்வி: நீங்கள் கூறும் ஊர்கள் எங்கு உள்ளன ?

பதில் : தமிழ் ஈழத்தில்

கேள்வி : அதற்குரிய சான்றுகள் என்ன?

பதில் : எடுத்துக்காட்டிற்கு யாழ்ப்பாணத்தைக் கொள்ளலாம். ஏழ்பனை நாடு என்னும் தொகைச் சொல்லே இன்று யாழ்ப்பாணம் என்று மருவி வ்ழங்குகின்றது என்பது என் முடிபு.

கேள்வி : ஈழம் என்னும் பெயர்ச் சொல் தோன்றக் காரணம் என்ன?

பதில் : ஏழ் நாடு என்னும் தொகைச் சொல்லே ஈழம் என்னும் பெயர்ச் சொல் தோன்ற அடித்தளமாக இருந்திருக்கக் கூடும்.

கேள்வி: இற்றைய இலங்கை அற்றைக்கு நடுவரை நாட்டில் இருந்ததாக கருதுகிறீர்களா? இல்லை என்று கருதுகிறீர்களா? பதில் : நடுவரை நாட்டில் இலங்கை எனும் பகுதி இருந்ததை ஏற்கிறேன்; ஆனால் நான் ஏற்கும் இலங்கை இன்றில்லை. ஏன் எனின் சிவதருமோத்தரம் என்னும் நூலிற்கு உரை கண்டவர் மேருமலையின் அடிவாரத்தில் இருந்த இலங்கை கடல் கோளால் மறைவுற்றது என குறிப்பிட்டுள்ளார் என்பதனால் ஆகும். கேள்வி : முன்னிருந்த இலங்கை அழிவுற்றிருப்பின் இதுபோழ்துள்ள இலங்கை பிறக்கக் காரணம் என்ன? பதில் : முன்பிருந்த இலங்கையில் வதிந்த மக்கள் கடல் கோளால் புலம் பெயர்ந்து தற்போதைய இலங்கையில் வதிந்த காரணத்தால் இலங்கை எனும் ஆகுபெயர் தோன்றக்காரணமாய் இருந்திருக்கக் கூடும்.

Sunday, June 7, 2009

07072009

பதில்: பலகொடுமுடிகளையுடைய பெருமலை என்பது நான் கொண்ட முடிபாகும். அப்பெருமலை மேருமலை என்பது அறிவார்ந்த பெருமக்கள் கொண்ட ஒருமித்த முடிபாகும்.
கேள்வி: தமிழ் நாட்டின் கண் பண்டு இருந்த அப்பெருமலையின் எல்லையினை சுட்டிக்காட்ட முடியுமா?
பதில்: முடியும். தென் கிழக்கு முதல் வடமேற்கு வரை செல்லுகின்ற இமய மலைப் போன்று வடமேற்கு தொடங்கி தென்கிழக்கின்கண் சென்றதாகத் தெரிகிறது. இம்மலையினையேபன்மலைய்டுக்கம் -மகேந்திரம் (வடமொழியில் ) என்று நம் முன்னோர் சுட்டிக்காட்டியுள்ளனர். மறைந்த குமரிக்கண்டம் என்னும் ஆங்கில நூலுள் இடம் பெற்றுள்ள வரைபடத்தின் மூலம் ஒரு பெருமலை யானது மேலைகடலில் தொடங்கி வடக்கும் தெற்குமாக குமரிக்குத் தென் பகுதியில் உள்ள நிலப்பகுதியின்கண் நெடுந்தூரம் சென்று பின் தென்மேற்காக திரும்பி மடகாஸ்கர் என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றுள்ளதை அறியமுடிகின்ற்து. அம்மலைக்கு கீழ்ப்பகுதியில் பெருமலை பிற இருந்ததாக தெரியவில்லை

Saturday, June 6, 2009

புலவர் அரசு பதில்கள் :

கேள்வி : இற்றைக்கு தமிழ் நாட்டின் வடஎல்லை திருத்தணி பகுதியும் தென் எல்லை குமரியும் உள்ளன போன்று பண்டு தமிழ் நாட்டின் வட தென் எல்லைகள் குறித்து தாங்கள் அளிக்கும் விளக்கம் என்ன ?

பதில் : இற்றைக்கு தமிழ் நாட்டின் நாற்புற எல்லைகள் மொழி வழி மாநிலங்கள் என்று பிரித்தகாலை தாங்கள் சுட்டிக்காட்டிய எல்லைகள் வரம்பாக இருப்பனபோன்று பண்டு வட தென் எல்லைகள் முறையே வேங்கடம் மற்றும் குமரியினை எல்லைகளாக கொண்டிருந்தன ; கிழக்கு மேற்கு எல்லைகளாக கடல்கள் இருந்தன .

கேள்வி : வடபால் வேங்கடம் என்னும் எல்லை இருந்ததாக ஏற்றுக்கொள்வது போன்று வேங்கடம் எனும் பெயர்ச்சொல் திருப்பதி- ஏழு மலையினைக் குறித்து வழங்கியது என்பதை ஏற்கிறீர்களா ?

பதில் : மறுக்கிறேன் .

கேள்வி : அதற்குரிய விளக்கம் என்ன?
பதில் : "வடா அது பனிபடு நெடுவரை வடக்கும்'' என்னும் புற நானூற்றின் ஆறாம் பாடலும் பதினேழாம் பாடலாக உள்ள "தென்குமரி வ்டபெருங்கல் " என்ற விடத்து "வ்டபெருங்கல் "என்ற தொகைச்சொல்லும் "வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி " என்னும் சிலப்பதிகார அடிகளும் வேங்கடம் என்னும் பெயர்ச்சொல் திருப்பதி -ஏழு மலையினைக் குறித்து வழங்கியது என்பதை மறுக்கின்றது . எனவே , வேங்கடம் எனும் பெயர்ச்சொல் இமயத்தைக் குறித்து வழங்கியது என்பதை உணர இடம் உள்ளது.

கேள்வி :வேங்கடாசலம், வேங்கடேஷ்வரன், வேங்கடேஷ் எனும் பெயர்கள் திருமாலைச் சுட்டி வழங்கும் நிலை உள்ள பொழுது வேங்கடம் எனும் பெயர் இமயத்தை சார்ந்து வழங்குகிறது என தாங்கள் அளிக்கும் கருத்துக்கு ஆதாரம் என்ன?
பதில்: வெண்கை இடம் கொண்டான் வெங்கிடத்தான் என்னும் பொருளில் வழங்கத் தலைப்பட்ட தொகைச் சொல் கால ஓட்டத்தில் வெங்கிடத்தான் - வேங்கிடத்தான் - வேங்கடத்தான் என உலக வழக்கில் மருவி வழங்குகின்றது. வெண்கை என்பது வெண்கைலை என்னும் தொகைச் சொல்லின்கண் உள்ள ஈற்றொலி கெட்டு வெண்+கை(லை)= வெண்கை என வழங்கும் தொகைச் சொல்லிற்கு உட்பொருள் வெள்ளீய பனிமலை என்பதாகும்.

கேள்வி: தென்பால் எல்லை குமரி என வரும் பெயர்ச் சொல் ஆகுபெயரா? காரணப்பெயரா?
பதில்: காரணப்பெயர்.

கேள்வி: : காரணப்பெயர் தோற்றத்திற்கு மூலமாய் அமைந்தது கடலா? ஆறா? மலையா ? விளக்கம் வேண்டும்.

பதில் : குமரி என்னும் காரணப்பெயர் தொடக்கத்தில் நட்டையும் அதன்பின் கடல், மலை, மற்றும் ஆறினைக் குறித்து பொருல் திரிந்து வழஙுகின்றது என்பதே யான் கொண்ட முடிபாகும்.



கேள்வி : குமரி என்னும் காரனப்பெயருக்கு சிலர் அளவில் மலையினையும் சிலர் அளவில் ஆறினையும் பொருல் கொள்ளும் நிலை உள்ளபொழுது தஙள் மட்டும் நாடு என பொருள் கொள்வதற்கு உரிய சான்று என்ன?

பதில்: "பஃருளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்து குமரிக் கொடுங் கடல் கொள்ள "என வரும் அடிகளீல் இடம் பெற்றுள்ள குமரிகோடுங் என்னும் தொகைச் சொல்லிற்கு மலை என பொருள் கொண்டோர் உண்டு. "தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்"என வரும் புறனானூற்று 6-ம் பாடலுக்கு ஆறு என உரை கண்டோரும் உண்டு. இதன் மூலம் குமரி என்னும் பெயர்ச் சொல் ஆறா? மலையா? என ஒரு முடிபுக்கு வர தடை இருந்து வருகின்றது. அதே நேரம் நான் கூறும் நாடு என்னும் பொருள் கொள்ள தடையில்லை. ஏன்? எனின் "குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி " என என வரும் 67-ம் புறப்பாடல் உறுதுணையாக உள்ளது. "குமரியம் பெருந்துறை" எனின் நடுவரை நாட்டின் நீர் நிலையினை
கேள்வி: குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி என்ற வரிகளுக்கு தாங்கள் தரும் விளக்கம் கொஅடு என்னும் சொல்லிற்கு மலை என்னும் பொருள் உள்ளதால் குமரி என்னும் நிலைமொழியுடன் கோடுஎன்னும் வருமொழி இணைந்து குமரிக் கோடு என வழங்கும் பொழுது நாடு என பொருள் கொள்ள தடை ஏற்படுவதை ஏற்கிறீர்களா?



பதில்: ஏற்பதற்கு இல்லை. ஏன் எனின் குமரி என்னும் சொல்லிற்கு நடு என்னும் பொருளும் கோடு என்னும் சொல்லிற்கு வரை என்னும் பொருளையும் கொள்ளின் ஒருசேர பொருந்தும்.



கேள்வி: நடுவரை,குமரிக்கோடு என்னும் தொகைச் சொற்கள் தோன்றக்காரணமாய் இருந்தது யாது?

பஃருளியாற்றுடன் பன்மலை யடுக்கத்து குமரிக் கோடுங்கொடுங்கடல் கொள்ள எனவரும் வரிகளில் இடம் பெற்றுள்ள "பன்மலை யடுக்கத்து " என்னும் தொகைச் சொல்லிற்கு தாங்கள் கொள்ளும் பொருள் என்ன ?

Tuesday, May 26, 2009

மரணத்தை வென்ற மாவீரன்:-கை.அறிவழகன்


இதோ தற்கொலை செய்து கொண்டார், அதோ சுனாமியில் இறந்தார், இதோ சுடப்பட்டார், அதோ உடல் கிடைத்தது, இதோ தப்பிக்க முயன்றார், அதோ கடலில் வாய்க்காலில் கிடந்தார், இதோ என் கனவில் வந்தார், அதோ என் வீட்டருகே வந்து விட்டார், ஐயகோ, உண்மையில் வந்து விடுவாரோ, வந்தால் என்ன செய்வது??????
இது தான் நண்பர்களே ஒரு மனிதனின், ஒரு மாவீரனின், ஒரு விடுதலைப் போராளியின் பொய்யான மரணம் உலகிற்கு உணர்த்திய பாடம், எதிரிக்குத் தருகின்ற அச்சம், உலகின் மிகப் பெருமை வாய்ந்த தமிழ் அறம் சார்ந்த வழியில் தன் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஒரு இனத்தின் சித்தாந்தமாக மாற்றிக் காண்பித்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற கட்டுக் கதையோ அல்லது உண்மையோ எனக்குள் ஒரு போதும் வருத்தத்தை விழைவிக்கவில்லை.அதற்கு அவர் செயற்கையாக மரணித்தது மட்டும் காரணம் இல்லை, ;
அதைத் தாண்டி ஒரு தெளிவான பார்வையும் இருக்கிறது, உங்களுக்கும் அது இருக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தக் கட்டுரை எழுதுவதற்கான ஒரு தேவை உருவானது.
பிரபாகரன் என்கிற தனி மனித அடையாளம் என்றாவது ஒரு நாள் அழிந்து போகும் என்பதும், எந்த ஒரு தனி மனிதனும் உடலால் இறப்பைத் தழுவியே தீர வேண்டும் என்பதும் இயற்கையின் நியதி. இந்த நியதிக்கு பிரபாகரனும் விலக்குப் பெற்றவர் அல்ல, அவர் பதினேழாவது முறையாகப் போலியாக இறந்தாலும் என்றாவது ஒரு நாள் அவர் உண்மையில் இறக்கத் தான் வேண்டும்.
அதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே மரணத்தை வென்று ஒரு இனத்தின் அடையாளமாக, ஒரு இனத்தின் கலாச்சார வெளிப்பாடாக, ஒரு இனத்தின் மொழி சார்ந்த ஊடகமாக, ஒரு இனத்தின் விடுதலை உணர்வின் வடிகாலாக உலகெங்கும் வாழுகிற தமிழ் மக்களின் நெஞ்சங்களில் உறைந்து போன பண்பாட்டை மரணம் ஒரு போதும் கொள்ளை கொள்ள இயலாது நண்பர்களே. மரணம் வெறும் உடலின் அடக்கம், மரணம் வெறும் உடல் இயங்கியலின் முடிவே அன்றி அது ஒரு போதும் இயக்கத்தின் நிறுத்தம் அல்ல, அது ஒரு போதும் இன, மொழி அடையாளங்களை வென்றெடுத்த ஒரு முத்திரையின் அழிவு அல்ல.
கடந்த நூற்றாண்டின் மையப் பகுதியில் இருந்தே சிதைக்கப்பட்டு வந்த ஒரு இனத்தின் அழிவை, தொன்மையை, கலை, கலாச்சார வெளிப்பாடுகளை, மொழியின் நுண்ணிய வடிவங்களை ஒரு தனி மனிதனின் விடுதலைப் போராட்டம் மீட்டெடுத்து எங்கள் இளைஞர்களின் கைகளில் கொடுத்திருக்கிறது, அந்தத் தனி மனிதன் உலகின் எங்கோ ஒரு மூலையில் பிறந்தாலும், புவியெங்கும் பரந்து விரிந்த எம் தமிழ்ச் சகோதரர்களின் உளமெங்கும் நிறைந்து இருக்கிறான், திரைப்பட மாயைகளில், ஆன்மீக அழிவுகளில், திராவிடக் கட்சிகளின் நீர்த்துப் புரையோடிப் போன கொள்கைகளில் கரைந்து போய் அழிவின் விளிம்பில் நின்று ஊசலாடிக் கொண்டிருந்த எமது இனத்தின் இளைஞர்களை தமிழ் என்கிற ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைத்த ஒரு மாபெரும் அடையாளத்தை அழிப்பதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் நீங்கள் முயன்றால் கூட முடியாது வீணர்களே……உலகின் மூத்த குடிகளில் ஒன்றான எங்கள் இனம் தனது அடையாளங்களை உலகெங்கும் பொருளாதார ஓட்டங்களில் தொலைத்துக் கரைந்து கொண்டிருந்த போது இயற்கை எமக்கு வகுத்தக் கொடுத்த ஒரு கலங்கரை விளக்கம் தான் பிரபாகரன் என்கிற மனிதனின் விடுதலை வேட்கை, அந்த விடுதலை வேட்கையின் பின்னால் எண்ணற்ற தமிழ் இனத்தின் பண்பாட்டு வெளிப்பாடுகள் அணிவகுத்து நின்றன,
தமிழ் இளைஞன் தமிழில் உரையாடுவதை பெருமையாக எண்ணத் துவங்கியதே இந்த மாவீரனின் வரவுக்குப் பின்னால் தானாய் நிகழ்ந்தது.எங்கோ கிடக்கும் இன, மொழி அடையாள உறவுகளை எல்லாம் தனது உறவாய், தனது குருதியாய் தமிழன் சிந்தனை செய்யத் துவங்கியதே பிரபாகரன் என்கிற விடிவெள்ளி செய்த விடுதலை வேள்வி. காலம் எங்கள் இனத்திற்கு ஒரு பன்னாட்டு அடையாளம் தருவதற்கு விளைவித்த அருந்தவம் தான் பிரபாகரன் என்கிற ஒரு அடையாளம், களப் போராட்டமாய் இருந்தாலும் அது அறவழிப் போராட்டமாய், பண்பாட்டு வெளியாய் நிகழ்ந்த ஒரு அற்புதம் தான் மாவீரன் பிரபாகரன் என்கிற அடையாளம்.சாதிகள், மதங்கள், வர்க்க பேதங்கள், பாலின ஆளுமைகள் இவற்றை எல்லாம் கடந்த ஒரு அரசை, அறம் சார்ந்த தமிழ் கலாசார வலிமையை உலகின் எந்த ஒரு வல்லாதிக்க சக்திகளின் உதவியும் இன்றி தனி ஒருவனாய் நடத்தி வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்த தமிழர்களின் நெறி தான் பிரபாகரன்.
உலகின் பல்வேறு சக்திகள் கண்டு நடுங்கின அந்த மாவீரனைக் கண்டு, உலகின் அடுத்த வல்லரசு என்று தன்னைத் தானே பறைசாற்றிக் கொள்ளும் இந்திய ஊழல் பெருச்சாளிகளுக்கு தங்கள் அருகாமையில் ஒரு அறநெறி ஆட்சி அமைந்து தங்கள் கொள்ளைகளுக்கு கொல்லி வைக்கப் போகிறதோ என்கிற அச்சம் நிறைந்து அதனை அழிக்கும் செயல்களில் ஆவலாய் இருந்தது.இவற்றை எல்லாம் கடந்து 33 ஆண்டுகள் தொடர்ந்து தான் கொண்ட இலட்சியத்தில் தமிழின விடுதலை என்கிற நெருப்பை ஒரு அணையாத விளக்காய்க் கொண்டு வந்து நமது கைகளில் தவழ விட்டிருக்கிற அந்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற செய்தி வேண்டுமானால் அந்த மாவீரனைக் கொன்று வண்ணக் கலவைகள் பூசிக் கனவுகளில் திளைக்கும் தமிழின விரோதிகளுக்கு தித்திக்கும் செய்தியாய் சில காலங்கள் இருக்கலாம், ஒரு போதும் உண்மையாய் தமிழ் உணர்வுகளின் இதய சிம்மாசனங்களில் இருக்கப் போவதில்லை.
உலகம் முழுதும் எதிர்த்து நின்று எங்கள் இன விடுதலையைக் கேலி பேசிய போதெல்லாம், தொன்மையான எங்கள் இனப் பெருமையைக் காத்த அந்த குல விளக்கு ஒரு போதும் எங்கள் இதயங்களில் இருந்து மரணிக்க இயலாது, மரணத்தை என்றோ வென்று பேரண்டத்தின் வெளிகளில் தமிழ் மொழிக்கான நிலையான இருக்கையை அமைத்த அந்த சித்தாந்தம் ஒரு தனி மனிதனின் புகழ் வெளிச்சம் அல்ல, மாறாக அது எங்கள் தமிழினத் தொன்மையின் வெளிச்சம், எங்கள் இன மொழி அடையாளங்களின் வீச்சு, அந்த வீச்சை நீண்ட நெடுங்காலமாக தனி ஒரு மனிதனாகச் சுமந்த அந்த மாவீரன் இன்று உலகெங்கும் நிரவிக் கிடக்கும் தமிழ் இளைஞர்களின் கைகளில் தன் விடுதலைப் போராட்டத்தை கையளித்திருக்கிறான்.மரணம் தாண்டி வாழும் விடுதலையின் முகவரியை அழிக்க நினைக்கும் மூடர்களுக்குத் தெரியாது!!! விடுதலையின், வெற்றி முத்திரையை உலகெங்கும் தமிழரின் இதயத்தில் இருத்திக் காட்டிய மாவீரனுக்கு அழிவென்பது உடலால் இல்லையென்று!!! எம் இனம் முழுக்க நிறைந்து கிடக்கும் உணர்வுகளின் எதிரொலியை, எதிரிகளே, அழிக்க முடியாதென்ற உண்மை ஒரு போதும் புரியாது உங்களுக்கு, மரணம் எம்மைக் கொஞ்ச நேரம் நிறுத்தி வைக்கலாம், ஒரு போதும் எங்கள் விடுதலை வேட்கையை அல்ல.எங்கள் விடுதலையின் பெயரைச் சொல்லி எச்சில் பொறுக்கும் ஏளன அரசியல் வீணர்களே. எங்கள் தலைவனின் துப்பாக்கித் தோட்டாக்களில் இல்லாத எந்த விடுதலையின் சுவடுகளும் உங்கள் மக்கள் மன்றங்களில் இல்லை. எங்கள் போராளிகளின் உடைந்த கால்களின் வலிமையும் இல்லாத உங்கள் இறையாண்மையின் பெயரில் எங்கள் விடுதலையை இனி சிறுமைப்படுத்த வேண்டாம், சிதறடிக்கப்படும் எங்கள் குருதியின் வெம்மையில் ஒரு நாள் சுதந்திர ஈழம் மலர்ந்தே தீரும்.மரணம் தாண்டி ஒரு தமிழ் மறையாகிப் போன பிரபாகரன் என்கிற அடையாளத்தை இன்னும் எத்தனை வல்லாதிக்கப் பேரினவாதிகள் வந்தாலும் துடைத்தழிக்க முடியாது நண்பர்களே, உண்மையில் மரணம் என்கிற இயற்கையின் மடியில் அவர் விழுந்திருந்தாலும் அந்த மாவீரனுக்குச் செய்யும் மரியாதையும், வீரவணக்கமும், அழுகையும் புலம்பலும் அல்ல, அந்த மாமனிதன் உலகெங்கும் தமிழ் மக்களின் உயிரில் பற்ற வைத்த விடுதலைப் பெருந்தீயின் வெம்மையை சிதறாமல் அவன் காலடிகளில் கொண்டு சேர்ப்பதே சிறந்த வீர வணக்கம்.மரணத்தை வென்று எம் இன விடுதலை வரலாற்றில் நிரந்தரத் தலைவனாய் வாழும் பிரபாகரன் என்னும் பெயரில் உறுதி ஏற்போம், ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் உணர்வால் ஒன்று பட்டு எதிர்காலத் தமிழினத்தை சமூகப் பொருளாதார நிலைகளில் வெற்றி பெற்ற இனமாக, சாதி மத வேறுபாடுகளைக் கடந்த பேரினமாக மாற்றிக் காட்டுவோம், தமிழ் ஈழம் என்னும் தணியாத தாகத்தை வென்று காட்டுவோம்.தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்- கை.அறிவழகன்