Thursday, June 11, 2009

ஐ.டி. நிறுவனங்களுக்கு மேலும் 3 ஆண்டுக்கு வரி சலுகை: ராசா பரிந்துரை

டெல்லி: சாப்ட்வேர் தொழில்நுட்ப பூங்காங்களுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை அளிக்கட வேண்டும் என்று தொலைத் தொடர்பு மற்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாகமன்மோகன் சிங்கை சந்தித்து அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சாஃப்ட்வேர் தொழில்நுட்ப பூங்கா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வரிச் சலுகை காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்டது. இதையடுத்து வரிச் சலுகை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

ஆனால், அதற்குப் பிறகு வரிச் சலுகை ரத்தாகலாம் என்று கருதப்பட்டது. சர்வதேச பொருளாதார மந்த நிலையால் சாப்ட்வேர் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வரிச் சலுகை ரத்தானால் அந்தத் துறை மேலும் சிக்கல்களை சந்திக்கும் என்று கருதப்படுகிறது.

இந் நிலையில் பிரதமரை சந்தித்த ராஜா மேலும் 3 ஆண்டுகளுக்கு வரிச் சலுகையை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஐ.டி. நிறுவனங்களுக்கு வரிச் சலுகையை நீட்டிப்பதால் ஏற்படும் பலன்களை அவர் பிரதமரிடம் விளக்கினார்.

மேலும் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்படும் முன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து வரிச் சலுகை குறித்துப் பேசவுள்ளதாகவும் ராசா கூறினார்.
THANKS :WWW.THATSTAMIL.ONEINDIA.COM

Monday, June 8, 2009

முதல்வன் பாணியில் ஜே.கே.ரித்திஷ் !

முதல்வன் பாணியில் ஜே.கே.ரித்திஷ் !


முதல்வன் அர்ஜூன் பாணியில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நடிகர் ஜே.கே.ரித்திஷ் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். ராமநாதபுரத்தில் லோக்கல் டி.வி., சேனல் ஒன்றில் 3 மணிநேரம் லைவ்வாக பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். ரித்திஷிடம் போனில் பேசிய பொதுமக்கள், இலவச தொலைக்காட்சி கிடைக்கவில்லை என்பதில் தொடங்கி, மின்சார பிரச்னை, தண்ணீர் பிரச்னை, சாலை வசதி என பல பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போனார்கள். ரித்திஷூம் சளைக்காமல்அனைவருக்கும் பதில் சொன்னதுடன் நிற்காமல், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் போனில் பேசினார்.

ரித்திஷின் இந்த அதிரடி நடவடிக்கை ராமநாதபுரம் தொகுதி மக்களை கவர்ந்தது. இதனை பலரும் போனில் தெரிவித்தார்கள். இதையடுத்து தொடர்ந்து மாதந்தோறும் பொதுமக்களுடன் இதுபோன்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக தெரிவித்தார்.

சினிமா துறையில் இருந்து எம்.பி.,யான ஜே.கே.ரித்திஷ், சினிமா பாணியிலேயே மக்களுக்கு தேவையான வசதிகளை அதிரடியாக செய்து கொடுக்கிறார்
நன்றி : அலைகள் இணையம்
கேள்வி : முன்பிருந்த இலங்கை அழிவுற்றதென உரையாசிரியர் கூற்றை எடுத்துரைக்கும் தாங்கள் அதற்குரிய மூலச்சான்றை கூற்முடியுமா? ப்தில் : முடியும். சிவதருமோத்தரம் என்னும் சைவவுபாகமத்தில் பொதிகைககுத் தென்பால் மாமேரு (மகேந்திர) மலை தெற்கு முதல் வடக்கு ஈறாக இருந்ததென்றும் அதன் அடிவாரத்தின்கண் இருந்த தேஎம் பொன்மயமான இலங்கை என்னும் பகுதியினை சுட்டிக்காட்டும் மூலபாடம் "துங்கமலி பொதித்தென்பாற் றுடர்ந்த வடிவாரத்தின் அங்கனக விலங்கையுமேழ் வரைச்சார லடித்தேசம்" என்பதாகும். கேள்வி : தமிழ் ஈழத்தின் எதிர்காலம் என்ன? பதில் : பொற்காலம். தருமந்தன்னை சூது கவ்வும் முதலில்; முடிவில் தருமம் வெல்லும் என்னும் கீதையின் பொன்மொழியினை படிப்போர் இதன் உண்மை சாரத்தை மறுக்க முடியாது

080620091

கேள்வி: தாங்கள் எடுத்துரைக்கும் நாடுகள் முழுமையாக கடல் கொண்டிருக்கக்கூடும் என்று கருதுகிறீர்களா? அல்லது அதன் எஞ்சிய பகுதி உள்ளன சில என்று கருதுகிறீர்களா?

பதில் : கடல் கோளுக்கு இரையானது போக எஞ்சிய பகுதிகள் சில உள்ளன என்று கூறலாம்.

கேள்வி: நீங்கள் கூறும் ஊர்கள் எங்கு உள்ளன ?

பதில் : தமிழ் ஈழத்தில்

கேள்வி : அதற்குரிய சான்றுகள் என்ன?

பதில் : எடுத்துக்காட்டிற்கு யாழ்ப்பாணத்தைக் கொள்ளலாம். ஏழ்பனை நாடு என்னும் தொகைச் சொல்லே இன்று யாழ்ப்பாணம் என்று மருவி வ்ழங்குகின்றது என்பது என் முடிபு.

கேள்வி : ஈழம் என்னும் பெயர்ச் சொல் தோன்றக் காரணம் என்ன?

பதில் : ஏழ் நாடு என்னும் தொகைச் சொல்லே ஈழம் என்னும் பெயர்ச் சொல் தோன்ற அடித்தளமாக இருந்திருக்கக் கூடும்.

கேள்வி: இற்றைய இலங்கை அற்றைக்கு நடுவரை நாட்டில் இருந்ததாக கருதுகிறீர்களா? இல்லை என்று கருதுகிறீர்களா? பதில் : நடுவரை நாட்டில் இலங்கை எனும் பகுதி இருந்ததை ஏற்கிறேன்; ஆனால் நான் ஏற்கும் இலங்கை இன்றில்லை. ஏன் எனின் சிவதருமோத்தரம் என்னும் நூலிற்கு உரை கண்டவர் மேருமலையின் அடிவாரத்தில் இருந்த இலங்கை கடல் கோளால் மறைவுற்றது என குறிப்பிட்டுள்ளார் என்பதனால் ஆகும். கேள்வி : முன்னிருந்த இலங்கை அழிவுற்றிருப்பின் இதுபோழ்துள்ள இலங்கை பிறக்கக் காரணம் என்ன? பதில் : முன்பிருந்த இலங்கையில் வதிந்த மக்கள் கடல் கோளால் புலம் பெயர்ந்து தற்போதைய இலங்கையில் வதிந்த காரணத்தால் இலங்கை எனும் ஆகுபெயர் தோன்றக்காரணமாய் இருந்திருக்கக் கூடும்.

Sunday, June 7, 2009

07072009

பதில்: பலகொடுமுடிகளையுடைய பெருமலை என்பது நான் கொண்ட முடிபாகும். அப்பெருமலை மேருமலை என்பது அறிவார்ந்த பெருமக்கள் கொண்ட ஒருமித்த முடிபாகும்.
கேள்வி: தமிழ் நாட்டின் கண் பண்டு இருந்த அப்பெருமலையின் எல்லையினை சுட்டிக்காட்ட முடியுமா?
பதில்: முடியும். தென் கிழக்கு முதல் வடமேற்கு வரை செல்லுகின்ற இமய மலைப் போன்று வடமேற்கு தொடங்கி தென்கிழக்கின்கண் சென்றதாகத் தெரிகிறது. இம்மலையினையேபன்மலைய்டுக்கம் -மகேந்திரம் (வடமொழியில் ) என்று நம் முன்னோர் சுட்டிக்காட்டியுள்ளனர். மறைந்த குமரிக்கண்டம் என்னும் ஆங்கில நூலுள் இடம் பெற்றுள்ள வரைபடத்தின் மூலம் ஒரு பெருமலை யானது மேலைகடலில் தொடங்கி வடக்கும் தெற்குமாக குமரிக்குத் தென் பகுதியில் உள்ள நிலப்பகுதியின்கண் நெடுந்தூரம் சென்று பின் தென்மேற்காக திரும்பி மடகாஸ்கர் என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றுள்ளதை அறியமுடிகின்ற்து. அம்மலைக்கு கீழ்ப்பகுதியில் பெருமலை பிற இருந்ததாக தெரியவில்லை

Saturday, June 6, 2009

புலவர் அரசு பதில்கள் :

கேள்வி : இற்றைக்கு தமிழ் நாட்டின் வடஎல்லை திருத்தணி பகுதியும் தென் எல்லை குமரியும் உள்ளன போன்று பண்டு தமிழ் நாட்டின் வட தென் எல்லைகள் குறித்து தாங்கள் அளிக்கும் விளக்கம் என்ன ?

பதில் : இற்றைக்கு தமிழ் நாட்டின் நாற்புற எல்லைகள் மொழி வழி மாநிலங்கள் என்று பிரித்தகாலை தாங்கள் சுட்டிக்காட்டிய எல்லைகள் வரம்பாக இருப்பனபோன்று பண்டு வட தென் எல்லைகள் முறையே வேங்கடம் மற்றும் குமரியினை எல்லைகளாக கொண்டிருந்தன ; கிழக்கு மேற்கு எல்லைகளாக கடல்கள் இருந்தன .

கேள்வி : வடபால் வேங்கடம் என்னும் எல்லை இருந்ததாக ஏற்றுக்கொள்வது போன்று வேங்கடம் எனும் பெயர்ச்சொல் திருப்பதி- ஏழு மலையினைக் குறித்து வழங்கியது என்பதை ஏற்கிறீர்களா ?

பதில் : மறுக்கிறேன் .

கேள்வி : அதற்குரிய விளக்கம் என்ன?
பதில் : "வடா அது பனிபடு நெடுவரை வடக்கும்'' என்னும் புற நானூற்றின் ஆறாம் பாடலும் பதினேழாம் பாடலாக உள்ள "தென்குமரி வ்டபெருங்கல் " என்ற விடத்து "வ்டபெருங்கல் "என்ற தொகைச்சொல்லும் "வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி " என்னும் சிலப்பதிகார அடிகளும் வேங்கடம் என்னும் பெயர்ச்சொல் திருப்பதி -ஏழு மலையினைக் குறித்து வழங்கியது என்பதை மறுக்கின்றது . எனவே , வேங்கடம் எனும் பெயர்ச்சொல் இமயத்தைக் குறித்து வழங்கியது என்பதை உணர இடம் உள்ளது.

கேள்வி :வேங்கடாசலம், வேங்கடேஷ்வரன், வேங்கடேஷ் எனும் பெயர்கள் திருமாலைச் சுட்டி வழங்கும் நிலை உள்ள பொழுது வேங்கடம் எனும் பெயர் இமயத்தை சார்ந்து வழங்குகிறது என தாங்கள் அளிக்கும் கருத்துக்கு ஆதாரம் என்ன?
பதில்: வெண்கை இடம் கொண்டான் வெங்கிடத்தான் என்னும் பொருளில் வழங்கத் தலைப்பட்ட தொகைச் சொல் கால ஓட்டத்தில் வெங்கிடத்தான் - வேங்கிடத்தான் - வேங்கடத்தான் என உலக வழக்கில் மருவி வழங்குகின்றது. வெண்கை என்பது வெண்கைலை என்னும் தொகைச் சொல்லின்கண் உள்ள ஈற்றொலி கெட்டு வெண்+கை(லை)= வெண்கை என வழங்கும் தொகைச் சொல்லிற்கு உட்பொருள் வெள்ளீய பனிமலை என்பதாகும்.

கேள்வி: தென்பால் எல்லை குமரி என வரும் பெயர்ச் சொல் ஆகுபெயரா? காரணப்பெயரா?
பதில்: காரணப்பெயர்.

கேள்வி: : காரணப்பெயர் தோற்றத்திற்கு மூலமாய் அமைந்தது கடலா? ஆறா? மலையா ? விளக்கம் வேண்டும்.

பதில் : குமரி என்னும் காரணப்பெயர் தொடக்கத்தில் நட்டையும் அதன்பின் கடல், மலை, மற்றும் ஆறினைக் குறித்து பொருல் திரிந்து வழஙுகின்றது என்பதே யான் கொண்ட முடிபாகும்.



கேள்வி : குமரி என்னும் காரனப்பெயருக்கு சிலர் அளவில் மலையினையும் சிலர் அளவில் ஆறினையும் பொருல் கொள்ளும் நிலை உள்ளபொழுது தஙள் மட்டும் நாடு என பொருள் கொள்வதற்கு உரிய சான்று என்ன?

பதில்: "பஃருளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்து குமரிக் கொடுங் கடல் கொள்ள "என வரும் அடிகளீல் இடம் பெற்றுள்ள குமரிகோடுங் என்னும் தொகைச் சொல்லிற்கு மலை என பொருள் கொண்டோர் உண்டு. "தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்"என வரும் புறனானூற்று 6-ம் பாடலுக்கு ஆறு என உரை கண்டோரும் உண்டு. இதன் மூலம் குமரி என்னும் பெயர்ச் சொல் ஆறா? மலையா? என ஒரு முடிபுக்கு வர தடை இருந்து வருகின்றது. அதே நேரம் நான் கூறும் நாடு என்னும் பொருள் கொள்ள தடையில்லை. ஏன்? எனின் "குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி " என என வரும் 67-ம் புறப்பாடல் உறுதுணையாக உள்ளது. "குமரியம் பெருந்துறை" எனின் நடுவரை நாட்டின் நீர் நிலையினை
கேள்வி: குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி என்ற வரிகளுக்கு தாங்கள் தரும் விளக்கம் கொஅடு என்னும் சொல்லிற்கு மலை என்னும் பொருள் உள்ளதால் குமரி என்னும் நிலைமொழியுடன் கோடுஎன்னும் வருமொழி இணைந்து குமரிக் கோடு என வழங்கும் பொழுது நாடு என பொருள் கொள்ள தடை ஏற்படுவதை ஏற்கிறீர்களா?



பதில்: ஏற்பதற்கு இல்லை. ஏன் எனின் குமரி என்னும் சொல்லிற்கு நடு என்னும் பொருளும் கோடு என்னும் சொல்லிற்கு வரை என்னும் பொருளையும் கொள்ளின் ஒருசேர பொருந்தும்.



கேள்வி: நடுவரை,குமரிக்கோடு என்னும் தொகைச் சொற்கள் தோன்றக்காரணமாய் இருந்தது யாது?

பஃருளியாற்றுடன் பன்மலை யடுக்கத்து குமரிக் கோடுங்கொடுங்கடல் கொள்ள எனவரும் வரிகளில் இடம் பெற்றுள்ள "பன்மலை யடுக்கத்து " என்னும் தொகைச் சொல்லிற்கு தாங்கள் கொள்ளும் பொருள் என்ன ?

Tuesday, May 26, 2009

மரணத்தை வென்ற மாவீரன்:-கை.அறிவழகன்


இதோ தற்கொலை செய்து கொண்டார், அதோ சுனாமியில் இறந்தார், இதோ சுடப்பட்டார், அதோ உடல் கிடைத்தது, இதோ தப்பிக்க முயன்றார், அதோ கடலில் வாய்க்காலில் கிடந்தார், இதோ என் கனவில் வந்தார், அதோ என் வீட்டருகே வந்து விட்டார், ஐயகோ, உண்மையில் வந்து விடுவாரோ, வந்தால் என்ன செய்வது??????
இது தான் நண்பர்களே ஒரு மனிதனின், ஒரு மாவீரனின், ஒரு விடுதலைப் போராளியின் பொய்யான மரணம் உலகிற்கு உணர்த்திய பாடம், எதிரிக்குத் தருகின்ற அச்சம், உலகின் மிகப் பெருமை வாய்ந்த தமிழ் அறம் சார்ந்த வழியில் தன் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஒரு இனத்தின் சித்தாந்தமாக மாற்றிக் காண்பித்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற கட்டுக் கதையோ அல்லது உண்மையோ எனக்குள் ஒரு போதும் வருத்தத்தை விழைவிக்கவில்லை.அதற்கு அவர் செயற்கையாக மரணித்தது மட்டும் காரணம் இல்லை, ;
அதைத் தாண்டி ஒரு தெளிவான பார்வையும் இருக்கிறது, உங்களுக்கும் அது இருக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தக் கட்டுரை எழுதுவதற்கான ஒரு தேவை உருவானது.
பிரபாகரன் என்கிற தனி மனித அடையாளம் என்றாவது ஒரு நாள் அழிந்து போகும் என்பதும், எந்த ஒரு தனி மனிதனும் உடலால் இறப்பைத் தழுவியே தீர வேண்டும் என்பதும் இயற்கையின் நியதி. இந்த நியதிக்கு பிரபாகரனும் விலக்குப் பெற்றவர் அல்ல, அவர் பதினேழாவது முறையாகப் போலியாக இறந்தாலும் என்றாவது ஒரு நாள் அவர் உண்மையில் இறக்கத் தான் வேண்டும்.
அதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே மரணத்தை வென்று ஒரு இனத்தின் அடையாளமாக, ஒரு இனத்தின் கலாச்சார வெளிப்பாடாக, ஒரு இனத்தின் மொழி சார்ந்த ஊடகமாக, ஒரு இனத்தின் விடுதலை உணர்வின் வடிகாலாக உலகெங்கும் வாழுகிற தமிழ் மக்களின் நெஞ்சங்களில் உறைந்து போன பண்பாட்டை மரணம் ஒரு போதும் கொள்ளை கொள்ள இயலாது நண்பர்களே. மரணம் வெறும் உடலின் அடக்கம், மரணம் வெறும் உடல் இயங்கியலின் முடிவே அன்றி அது ஒரு போதும் இயக்கத்தின் நிறுத்தம் அல்ல, அது ஒரு போதும் இன, மொழி அடையாளங்களை வென்றெடுத்த ஒரு முத்திரையின் அழிவு அல்ல.
கடந்த நூற்றாண்டின் மையப் பகுதியில் இருந்தே சிதைக்கப்பட்டு வந்த ஒரு இனத்தின் அழிவை, தொன்மையை, கலை, கலாச்சார வெளிப்பாடுகளை, மொழியின் நுண்ணிய வடிவங்களை ஒரு தனி மனிதனின் விடுதலைப் போராட்டம் மீட்டெடுத்து எங்கள் இளைஞர்களின் கைகளில் கொடுத்திருக்கிறது, அந்தத் தனி மனிதன் உலகின் எங்கோ ஒரு மூலையில் பிறந்தாலும், புவியெங்கும் பரந்து விரிந்த எம் தமிழ்ச் சகோதரர்களின் உளமெங்கும் நிறைந்து இருக்கிறான், திரைப்பட மாயைகளில், ஆன்மீக அழிவுகளில், திராவிடக் கட்சிகளின் நீர்த்துப் புரையோடிப் போன கொள்கைகளில் கரைந்து போய் அழிவின் விளிம்பில் நின்று ஊசலாடிக் கொண்டிருந்த எமது இனத்தின் இளைஞர்களை தமிழ் என்கிற ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைத்த ஒரு மாபெரும் அடையாளத்தை அழிப்பதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் நீங்கள் முயன்றால் கூட முடியாது வீணர்களே……உலகின் மூத்த குடிகளில் ஒன்றான எங்கள் இனம் தனது அடையாளங்களை உலகெங்கும் பொருளாதார ஓட்டங்களில் தொலைத்துக் கரைந்து கொண்டிருந்த போது இயற்கை எமக்கு வகுத்தக் கொடுத்த ஒரு கலங்கரை விளக்கம் தான் பிரபாகரன் என்கிற மனிதனின் விடுதலை வேட்கை, அந்த விடுதலை வேட்கையின் பின்னால் எண்ணற்ற தமிழ் இனத்தின் பண்பாட்டு வெளிப்பாடுகள் அணிவகுத்து நின்றன,
தமிழ் இளைஞன் தமிழில் உரையாடுவதை பெருமையாக எண்ணத் துவங்கியதே இந்த மாவீரனின் வரவுக்குப் பின்னால் தானாய் நிகழ்ந்தது.எங்கோ கிடக்கும் இன, மொழி அடையாள உறவுகளை எல்லாம் தனது உறவாய், தனது குருதியாய் தமிழன் சிந்தனை செய்யத் துவங்கியதே பிரபாகரன் என்கிற விடிவெள்ளி செய்த விடுதலை வேள்வி. காலம் எங்கள் இனத்திற்கு ஒரு பன்னாட்டு அடையாளம் தருவதற்கு விளைவித்த அருந்தவம் தான் பிரபாகரன் என்கிற ஒரு அடையாளம், களப் போராட்டமாய் இருந்தாலும் அது அறவழிப் போராட்டமாய், பண்பாட்டு வெளியாய் நிகழ்ந்த ஒரு அற்புதம் தான் மாவீரன் பிரபாகரன் என்கிற அடையாளம்.சாதிகள், மதங்கள், வர்க்க பேதங்கள், பாலின ஆளுமைகள் இவற்றை எல்லாம் கடந்த ஒரு அரசை, அறம் சார்ந்த தமிழ் கலாசார வலிமையை உலகின் எந்த ஒரு வல்லாதிக்க சக்திகளின் உதவியும் இன்றி தனி ஒருவனாய் நடத்தி வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்த தமிழர்களின் நெறி தான் பிரபாகரன்.
உலகின் பல்வேறு சக்திகள் கண்டு நடுங்கின அந்த மாவீரனைக் கண்டு, உலகின் அடுத்த வல்லரசு என்று தன்னைத் தானே பறைசாற்றிக் கொள்ளும் இந்திய ஊழல் பெருச்சாளிகளுக்கு தங்கள் அருகாமையில் ஒரு அறநெறி ஆட்சி அமைந்து தங்கள் கொள்ளைகளுக்கு கொல்லி வைக்கப் போகிறதோ என்கிற அச்சம் நிறைந்து அதனை அழிக்கும் செயல்களில் ஆவலாய் இருந்தது.இவற்றை எல்லாம் கடந்து 33 ஆண்டுகள் தொடர்ந்து தான் கொண்ட இலட்சியத்தில் தமிழின விடுதலை என்கிற நெருப்பை ஒரு அணையாத விளக்காய்க் கொண்டு வந்து நமது கைகளில் தவழ விட்டிருக்கிற அந்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற செய்தி வேண்டுமானால் அந்த மாவீரனைக் கொன்று வண்ணக் கலவைகள் பூசிக் கனவுகளில் திளைக்கும் தமிழின விரோதிகளுக்கு தித்திக்கும் செய்தியாய் சில காலங்கள் இருக்கலாம், ஒரு போதும் உண்மையாய் தமிழ் உணர்வுகளின் இதய சிம்மாசனங்களில் இருக்கப் போவதில்லை.
உலகம் முழுதும் எதிர்த்து நின்று எங்கள் இன விடுதலையைக் கேலி பேசிய போதெல்லாம், தொன்மையான எங்கள் இனப் பெருமையைக் காத்த அந்த குல விளக்கு ஒரு போதும் எங்கள் இதயங்களில் இருந்து மரணிக்க இயலாது, மரணத்தை என்றோ வென்று பேரண்டத்தின் வெளிகளில் தமிழ் மொழிக்கான நிலையான இருக்கையை அமைத்த அந்த சித்தாந்தம் ஒரு தனி மனிதனின் புகழ் வெளிச்சம் அல்ல, மாறாக அது எங்கள் தமிழினத் தொன்மையின் வெளிச்சம், எங்கள் இன மொழி அடையாளங்களின் வீச்சு, அந்த வீச்சை நீண்ட நெடுங்காலமாக தனி ஒரு மனிதனாகச் சுமந்த அந்த மாவீரன் இன்று உலகெங்கும் நிரவிக் கிடக்கும் தமிழ் இளைஞர்களின் கைகளில் தன் விடுதலைப் போராட்டத்தை கையளித்திருக்கிறான்.மரணம் தாண்டி வாழும் விடுதலையின் முகவரியை அழிக்க நினைக்கும் மூடர்களுக்குத் தெரியாது!!! விடுதலையின், வெற்றி முத்திரையை உலகெங்கும் தமிழரின் இதயத்தில் இருத்திக் காட்டிய மாவீரனுக்கு அழிவென்பது உடலால் இல்லையென்று!!! எம் இனம் முழுக்க நிறைந்து கிடக்கும் உணர்வுகளின் எதிரொலியை, எதிரிகளே, அழிக்க முடியாதென்ற உண்மை ஒரு போதும் புரியாது உங்களுக்கு, மரணம் எம்மைக் கொஞ்ச நேரம் நிறுத்தி வைக்கலாம், ஒரு போதும் எங்கள் விடுதலை வேட்கையை அல்ல.எங்கள் விடுதலையின் பெயரைச் சொல்லி எச்சில் பொறுக்கும் ஏளன அரசியல் வீணர்களே. எங்கள் தலைவனின் துப்பாக்கித் தோட்டாக்களில் இல்லாத எந்த விடுதலையின் சுவடுகளும் உங்கள் மக்கள் மன்றங்களில் இல்லை. எங்கள் போராளிகளின் உடைந்த கால்களின் வலிமையும் இல்லாத உங்கள் இறையாண்மையின் பெயரில் எங்கள் விடுதலையை இனி சிறுமைப்படுத்த வேண்டாம், சிதறடிக்கப்படும் எங்கள் குருதியின் வெம்மையில் ஒரு நாள் சுதந்திர ஈழம் மலர்ந்தே தீரும்.மரணம் தாண்டி ஒரு தமிழ் மறையாகிப் போன பிரபாகரன் என்கிற அடையாளத்தை இன்னும் எத்தனை வல்லாதிக்கப் பேரினவாதிகள் வந்தாலும் துடைத்தழிக்க முடியாது நண்பர்களே, உண்மையில் மரணம் என்கிற இயற்கையின் மடியில் அவர் விழுந்திருந்தாலும் அந்த மாவீரனுக்குச் செய்யும் மரியாதையும், வீரவணக்கமும், அழுகையும் புலம்பலும் அல்ல, அந்த மாமனிதன் உலகெங்கும் தமிழ் மக்களின் உயிரில் பற்ற வைத்த விடுதலைப் பெருந்தீயின் வெம்மையை சிதறாமல் அவன் காலடிகளில் கொண்டு சேர்ப்பதே சிறந்த வீர வணக்கம்.மரணத்தை வென்று எம் இன விடுதலை வரலாற்றில் நிரந்தரத் தலைவனாய் வாழும் பிரபாகரன் என்னும் பெயரில் உறுதி ஏற்போம், ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் உணர்வால் ஒன்று பட்டு எதிர்காலத் தமிழினத்தை சமூகப் பொருளாதார நிலைகளில் வெற்றி பெற்ற இனமாக, சாதி மத வேறுபாடுகளைக் கடந்த பேரினமாக மாற்றிக் காட்டுவோம், தமிழ் ஈழம் என்னும் தணியாத தாகத்தை வென்று காட்டுவோம்.தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்- கை.அறிவழகன்
எங்களுடைய வரலாற்றில் எங்கள் கைகளில் இரத்தம் படிந்திருப்பது இதுதான் முதற் தடவையல்ல. எம்.கே.பத்ரகுமார்
இந்திய வெளிநாட்டுச் சேவைகளில் இராஜ தந்திரியாகப் பணியாற்றியவர். இலங்கையில் அரசியற் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மே 19 அன்று மரணமானார். சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டாலும் அந்தச் சம்பவங்களின் காட்சிகள் எம்மை விட்டு அகலாதபடி தொடர்ந்து கொண்டிருக்கிறது.அச்சம்பவங்களினால் நாங்கள் பெருமளவிற்கு இயல்பற்ற நிலையை உணர்வதோடு அமைதியாக இருக்கவும் முடியாதவர்களாக உள்ளோம். ஏதோ ஒன்று எங்கோ ஓரிடத்தில் உறுத்திக் கொண்டே இருக்கிறது. எங்கள் கைகளில் இரத்தம் இருப்பதை நாங்கள் பின்னர் உணர்ந்தோம். எங்கள் கைகளில் மட்டுமல்ல, எங்கள் முழு உடலிலும், எமக்குள்ளே ஆழமாகவும் இரத்தம்.எங்களுடைய மனச்சாட்சி ‐ இந்தப் போர்க்களத்தின் பின்னால் மிஞ்சியிருப்பதெல்லாம் எங்களுடைய நாளாந்த வாழ்க்கையிலும் இரத்தம் சொட்டுச் சொட்டாக வடிவதுதான்.பிரபாகரனின் இரத்தம். இல்லை, இது பிரபாகரனின் இரத்தம் மட்டுமல்ல, 70 ஆயிரம் இலங்கைத் தமிழர்களினதும் இரத்தம். கடந்த கால் நூற்றாண்டு காலமாக வார்த்தைகளால் சொல்ல முடியாத வன்முறையால் சிதைவுற்றுப் போன இலங்கைத் தமிழ் மக்களுடைய இரத்தம்.ஓவ்வொருநாட் காலையிலும், மாலையிலும் எங்களுடைய விருப்பத்திற்குரிய கடவுளான விநாயகருக்கு நாங்கள் எல்லாவகையான பூஜைகளையும் சமயாசாரப்படி செய்யலாம் எங்களுடைய வாழ்க்கை வெற்றிமேல் வெற்றியை நோக்கி நடைபோடலாம். ஆனால் நாங்கள் சுமக்கும் வடுக்களை கழுவிவிட்டுவிட முடியாது. 70 ஆயிரம் இறந்த ஆத்மாக்களின் சாபத்திலிருந்து நாங்கள் தப்பி விட முடியாது. எங்களுடைய குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் நிச்சயமாக பரம்பரை பரம்பரையாக இந்த மாபெரும் சாபத்திற்கு ஆளாகப் போகிறோம். ஓ கடவுளே, என்ன ஒரு கசப்பான முதுசம்.நீண்ட காலத்திற்கு முன்பு நாங்கள் பிரபாகரனை உருவாக்கினோம். எங்குமில்லாதவாறான ஒருவரை நாம் தேடியெடுத்தோம். அவரிடம் நாங்கள் கவரும் விதத்தில் என்னத்தைக் கண்டெடுத்தோமென்றால், முற்றாகவே அரசியலற்ற ‐ பெருமளவிற்கு அரசியலில் அப்பாவித்தனமானவராக இருந்தார் என்பதையே. அவர் பல வழிகளில் பயந்த சுபாவமுள்ளவராக இருந்தார். அவர் ஆயுதங்கள் குறித்தும், படைப்பிரிவு குறித்தும் அதிக ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். எங்களுடைய தேவைகளுக்கு மிகப் பொருத்தமானவராகவும் அவர் இருந்தார்.இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவைப் பகைத்துக் கொண்ட, இந்தியாவுடன் உடன்பாடு கொண்டிராத ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தை அவமானப்படுத்துவதற்கும் அவருக்கு ஒரு பாடம் படிப்பிப்பதற்கும் அது உதவியது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன பெருமளவிற்கு மேற்குலகம் சார்ந்தவராக இருந்தார்.
எங்களுடைய கொல்லைப் புறத்தில் அமெரிக்கர்களுடனும், இஸ்ரேலியர்களுடனும் அவர் விளையாடுவதனை நாங்கள் விரும்பவில்லை. ஆகவே ஜெயவர்த்தனவின் போலிக்கௌரவத்திற்கு எதிராகப் பிரபாகரனை நாங்கள் உருவாக்கினோம் பிந்த்ரன் வாலேயை உருவாக்கியது போல.பின்னர்.காலஞ் சென்றது, கொழும்பு அரசாங்கம் அந்த நேரத்தில் இருந்ததுபோல நாங்களும் மேற்குலகம் சார்ந்த, அதனை நோக்கிய, முற்றிலுமாக மாறுபட்ட ஒரு திசையில் பயணித்தோம். எங்களுடைய தற்புகழ்ச்சி கொண்ட நியூடெல்லித் தலைவர் ஜெயவர்த்தனவை வெறுத்தொதுக்கினார். பின்னர் ஜெயவர்த்தன அதிகாரத்தில் இல்லாது போனார். புதிதாகப் பதவிக்கு வந்த மென்மைப் போக்குடையவர் தன்னுடைய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கடுமையான எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தவில்லை. எங்களுடைய முன்னுரிமைகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கேற்ப பிரபாகரன் கைவிடப்பட்டார். ஆனால் அதேநேரம் அவர் ஒரு முழு ஆளாக வளர்ச்சியடைந்திருந்தார் என்பதை நாங்கள் கவனிக்கத் தவறி விட்டோம். ஏங்களுடைய அச்சுறுத்தலுக்கும், அழுத்தத்திற்கும் அவர் அடிபணியாமல் எதிர்ப்புத் தெரிவித்தார். அவருடைய கொலரைப் பிடித்து இறுக்கியபோது அவர் சகிப்புத்தன்மையுடன் பின்வாங்கினார். அவர் உடனடியாகவே எங்களுடைய தலைவரைக் கொன்றொழித்தார். அத்தோடு அவர் எங்களுடைய முழு எதிரியானார்.
வெளிப்படையாக நாங்கள் இதுவரை அவருக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. அவர் தன்னுடைய மக்களிடையே ஒரு முடிசூடா மன்னனாகவும், பலமிக்கவராகவும் ஏற்கெனவே உருவாகியிருந்தார்.
ஆகவே நாங்கள் காத்திருந்தோம்.
நாங்கள் நிறையச் சகித்துக் கொண்டோம். அந்தச் சகிப்புத் தன்மையை எங்களுடைய 5 ஆயிரமாண்டுகால வரலாறு எமக்குத் தந்தது. எங்களுக்கான நேரத்திற்காகக் காத்திருப்பதற்கு எங்களுடைய பிரபஞ்ச மதம் எங்களுக்கு ஒரு ஈடிணையற்ற ஞானத்தை வழங்கியிருந்தது.பின்னர் அதற்கான சந்தர்ப்பம் வந்தது. நாங்கள் பிரபாகரனைக் கொல்வதற்காக உடனடியாகவே அவருடைய எதிரிகளுடன் கைகோர்த்துக் கொண்டோம். நாங்கள் அவருடைய எதிரிகளை ஆயுத மயப்படுத்தினோம். அவர்களுக்குப் பயிற்சியளித்தோம். அவர்களுடைய திறமைகளை அதிகரித்தோம் பிரபாகரனைக் கொல்வதற்கு. நாங்கள் விவேகத்துடன் அவர்களை வழிநடத்தினோம். பிரபாகரன் தப்புவதற்கான எல்லா வழிகளையும் நாம் அடைத்தோம். பின்னர் அவருடைய கழுத்தில் கயிறு இறுகும்வரை பொறுமையோடு காத்திருந்தோம்.நம்புகிறீர்களோ இல்லையோ, இப்போது அவர் இல்லை.
அவருடைய மரணத்தில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர் எப்படி? ஏப்போது இறந்தார்? என்கிற மர்மம் அவரது மரணத்தைச் சுற்றியுள்ள புதிர் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். எங்களுக்குத் தெரிந்ததை நாங்கள் ஒருபோதும் சொல்லப் போவதில்லை. தமிழ் நாட்டுத் தேர்தலுக்குப் பின்னர்தான் இந்த மரணம் குறித்து உலகம் விழித்துக் கொண்டது. இல்லாவிட்டால் இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் எங்களுக்கு எதிராக தாறுமாறாக இருந்திருக்கும். இந்திய ஜனநாயகம் இதற்கு முற் கண்டிராத வழிகளில் சென்றிருக்கும். நாங்கள் எங்களுடைய பழிவாங்கலைத் தீர்த்துக் கொண்டோம். இப்போது எதுவுமேயில்லை. எங்களுக்கு முன்னாலுள்ள பொய்கள் என்ன? தமிழர்களுடைய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்போமென்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதுதான்.முகாம்களிலுள்ள தமிழ் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கும் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வதற்கும் நாங்கள் முன்னுரிமையளிப்போமென்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. எல்லாவற்றுக்கும் பிறகு இலங்கைத் தமிழர்கள் எங்களுடைய வரலாற்றுக்;கதைகளில் ஒரு பகுதியினராக இருப்பர்.ஆனால் நாங்கள் யதார்த்தமாகவும் இருக்க வேண்டும்.
எங்களுடைய அரசியற் தலைவர்கள் வெளிப்படையாகச் சொல்லும் அரசியற் தீர்வுக்கான சந்தர்ப்பம் என்பது பூச்சியம் என்று எங்களுடைய இதயத்திற்குத் தெரியும். சிங்களவர்கள் ஒருபோதுமே அரசியற் தீர்வொன்றைக் காண்பதற்கு உலகம் உத்தரவிடுவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உள்நாட்டு விடயங்களில் தலையிடுவதாகக் கூறி எங்களால் மேற்கொள்ளப்புடும் எந்த முயற்சியையும் அவர்கள் துரிதமாகவும் தீர்மானமாகவும் நிராகரிப்பார்கள்.தேரவாத பௌத்தத்தையும், சிங்கள மக்களுடைய கௌரவத்தையும் பாதுகாப்பதற்குள்ள ஒரேயொரு நாடு இலங்கைதானென அவர்கள் நினைப்பதை நாங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். அவர்களுடைய கலாசார தேசியவாதத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர்கள் எண்ணுகிறார்கள். இலங்கை சிங்களவர்களுடைய நாடு என்றுதான் அவர்கள் பார்க்கிறார்கள். பௌத்தத்தைத் தமது நாட்டிலிருந்து துடைத்தழித்த இந்தியர்களை எப்படியவர்கள் அனுமதிப்பார்கள். நாங்கள் சிங்களவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றால் அவர்கள் சீனாவை அல்லது பாகிஸ்தானை நெருங்குவார்கள் எங்களுடைய அழுத்தத்தைச் சமாளிப்பதற்கு. அதற்கான பலம் அவர்களிடமிருக்கிறது. சிங்களவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களிற் சிலர் இராஜதந்திரத்திலும் ஊடக முகாமைத்துவத்திலும் மிகச் சிறந்தவர்களென்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.அவர்கள் தங்களுடைய நாட்டை ஒரு பௌத்த தேசமாக ஆக்குவதற்காகப் போராடுகிறார்கள்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில் தங்களுக்கெதிரான அழுத்தம் ஏற்படுத்தப்பட்டபோது சீனாவையும், ரஸ்யாவையும் பாவித்ததன் ஊடாக கடந்த வாரம் அவர்கள் தங்களுடைய இராஜதந்திரத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்கள்.இலங்கை அரசாங்கத்தின் மீது போர்க் குற்றம் சுமத்த ஐரோப்பியர்கள் கனவு காண்கிறார்கள். என்ன ஒரு சிறுபிள்ளைத்தனம்.வரும் நாட்களில் என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறீர்களென நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டோம் ஆனால் அவர்கள் அதனை வெளியிடவில்லை. ஆனால் அவர்களிடம் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வெதுவும் இல்லையென்பது எங்களுக்குத் தெரியும்.அவர்கள் ஏற்கனவே இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் தமிழர்களுடைய பிரச்சினையைத் தீர்த்திருந்தார்கள். இந்த மாவட்டங்களில் தமிழர்கள் பெரும்பான்மையினராக இல்லை. இதேபோல பிரபாகரன் இரண்டு தசாப்தங்களாகக் கோலோச்சிய வடமாகாணத்தில் நாளையிலிருந்து சிங்களக் குடியேற்றங்களை அவர்கள் ஆரம்பிப்பார்கள். வடபிராந்தியத்தில் தமிழ் மாவட்டங்கள் இல்லாதிருப்பதை அவர்கள் உத்தரவாதப்படுத்துவார்கள். தமிழர்கள் அவர்களுடைய வடமாகாணத்திலேயே சிறுபான்மையினராக ஆக்கப்படுவார்கள். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றங்களுக்கிடையே அவர்கள் வாழ வேண்டியேற்படும். இவையெல்லாம் இலங்கையின் சமஸ்டிக் கட்டமைப்புக்குள்ளேயே நடைபெறும். இலங்கை தனது பாராளுமன்ற ஜனநாயகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும்.
இன்னொரு தசாப்தத்திற்குப் பிறகு இந்திய உப கண்ட வரலாற்றில் தமிழ்ப் பிரச்சினையென்பது வெறும் பழங்கதையாகிவிடும். சிங்களவர்கள் இந்தியர்களின் மிகச் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். எங்களுடைய உயர் குடியினரும், அவர்களுடைய உயர் குடியினரும் ஒரே விடயங்களையே பேசுவார்கள். அவர்கள் இருவரும் நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள். கோல்ப் விளையாடுவார்கள். குளிர்ந்த பியர் அருந்துவார்கள். அவர்கள் நன்றாக இருக்க நாங்கள் வாழ்த்துவோம்.அப்போதும் எங்கள் கைகளில் இரத்தம் இருந்து கொண்டே இருக்கும்.அது எப்போதுமே எங்களுக்கு இடைஞ்சல் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஆனால் எங்களுடைய வரலாற்றில் எங்கள் கைகளில் இரத்தம் படிந்திருப்பது இதுதான் முதற் தடவையல்ல.இரத்தக்கறைகள் கழுவப்படப் போவதில்லை.இந்தக் கட்டுரை விடுதலைப் புலிகளின் தலைவர் மரணமானார் என்பதனை அடிப்படையாகக் கொண்டு கட்டுரையாளர் எம்.கே.பத்ரகுமாரால் எழுதப்பட்டது. இவர் இந்தியாவின் ராஜதந்திர சேவையில் நீண்டகாலம் பணியாற்றியவர். இலங்கை தொடர்பான செயலாளராகவும் புதுடெல்லியில் பணியாற்றி உள்ளார்.
நன்றி தமிழ் சகி நியூஸ்

முகப்புக்கு செல்ல இங்கு அழுத்தவும்

Friday, May 22, 2009

ஈழத் தமிழ் உறவுகளுக்கு ஒரு தமிழகத்து உறவின் மடல்
திகதி: 09.05.2009 // தமிழீழம்
- பூங்குழலி

என் அன்பான உறவுகளே,
உங்களுடன் நேரடியாகப் பழகிய காலங்களில் உங்களின் உண்மையான அன்பைப் பெறும் வாய்ப்பைப் பெற்றவள் நான். அந்த அன்பை மனதில் தேக்கி வைத்து இந்த மடலினை எழுதுகிறேன்.

1980-களின் முற்பகுதியில் நான் சிறுமியாக இருந்த போது, "கற்பழிப்பு" என்ற சொல்லின் பொருள் தெரியா மலேயே அது கொடூரமானது என்பதை உணர முடிந்தது. ஏனெனில் எங்கோ நாலாம் பக்கத்தின் மூலையில் வரக் கூடிய கொலை, கற்பழிப்பு செய்திகள் தலைப்புச் செய்திகளாகத் தொடர்ந்து வந்தது அந்த காலக்கட்டத்தில்தான்.

அது ஈழத்தை முன்னிட்டு. அவைதான் கொலை போன்றே "கற்பழிப்பு" என்று ஊடகங்களால் விளிக்கப்பட்ட வன் புணர்ச்சியும் கொடூரமானது என்பதை மனதில் பதிய வைத்தன. இப்படியும் கொடூரங்கள் நடக்கக்கூடுமா என அதிர வைத்தன. அன்று எம்மைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் ஈழம் குறித்து பேசினார்கள். கூட்டங்கள், ஓவிய மற்றும் புகைப்படக் கண்காட்சிகள், கருத்தரங்கங்கள் என தெருக்கள் தோறும் ஈழ ஆதரவு நிகழ்ச்சிகள் ஏதாவது நடக்காத நாள் இருக்காது.

விடுதலைப் போராட்டம் என்றால் என்னவென்று புரியாத வயதிலேயே விடுதலை வீரர்கள் எங்களுக்கு மாமா, அண்ணன் என்று உறவானார்கள். பின்னர் அவர்களே எமக்கு நாயகர்களாகவும் ஆனார்கள். அன்று, நிச்சயம் ஒரு ஈழத் தமிழ் குடும்பமாவது நட்பாக உறவாக இல்லாத தமிழகக் குடும்பமே இருக்க இயலாது.

இன்று போல் ஈழத் தமிழ் ஏதிலிகள் எங்கோ ஒரு முகாமில் அடைக்கப் பட்டிருக்கவில்லை. எமக்கு அருகில், எம்மில் ஒருவராக வாழ்ந்து வந்தனர். பள்ளி தொடங்கி கல்லூரி வரை காலம் தோறும் என்னுடன் படித்த ஈழத் தமிழ் பிள்ளைகள் எத்தனையோ. அண்டை வீட்டாராக, உடன் படிப்பவர்களாக அவர்களுடன் பழகும் போது அவர்கள் காட்டிய அன்பை முழுமையாக உணர்ந்து சுகித்தவள்.

அதை விட அதிகமாக அவர்களின் துயரங்களை அவர்களின் வாய் மொழியிலேயே கேட்டு வெதும்பியவள். இழப்பில்லாத குடும்பமே கிடையாதோ என்று எண்ண வைக்கும் செய்திகள். நாம் எத்தனை பாதுகாப்பான வாழ்க்கை வாழ்கிறோம் என்பதை உணர வைத்த நிகழ்ச்சிகள். அண்டை நாட்டுச் சிக்கல் அவர்கள் மூலம் அண்டை வீட்டுச் சிக்கலாகப் புரிந்தது.

இன்று அவை அனைத்தும் என் மனதில் நிழலாடுகின்றன. பழகிய ஒவ்வொரு ஈழத் தமிழரின் முகமும் மனதில் வந்து போகின்றன. யார் எங்கு இருக்கிறார்கள் என தெரியாது. அதை விட வேதனை... உயிருடன் இருக்கிறார்களா என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது.
இதோ, 20 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இன்றும் ஈழம் பற்றி நாங்கள் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். ஈழ ஆதரவு நிகழ்வுகள் இன்றும் எம்மைச் சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நீங்களும் சோர்வடையாது போராடிக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.

இயல்பான மனித வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்நாளில் தன் மனதுக்கு நெருக்கமானவர்களில் அதிகம் போனால் எத்தனை பேரை சாவு கொண்டு போக பார்த்திருக்க முடியும்? 5 , 10?
ஆனால் உங்கள் நிலையோ? நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. அத்தனையும் தாங்கிக் கொண்டும் தளர்வின்றிப் போராடுகிறீர்கள். எனினும்.. அண்மையில் வரும் செய்திகளை கேட்க கேட்க மனதில் கவலையை விட அதிகமாக குற்ற உணர்ச்சி எழும்புகிறது.

கொத்து கொத்தாக சாவு விழுகிறது. எங்களால் இங்கு வெறுமனே கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்தான் நடத்த முடிகிறது. உங்களின் அவலக் குரல் எங்கள் செவிகளை எட்டிவிடாதிருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்யப்படுகிறது.

நொடியில் தகவல் பரிமாற்றம் சாத்தியப்படக் கூடிய இந்த நவீன காலத்தில்தான் உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதையே வெளிவிடாமல் தடுப்பதும் அவர்களுக்கு சாத்தியப்படுகிறது.

ஆனால் புதிதாகத் தான் உங்களின் அவலம் எங்களுக்கு புரிய வேண்டுமா? 30 ஆண்டு காலத்தில் சாவு எண்ணிக்கை அதிகரித்தது தவிர வேறு என்ன மாற்றம் நடந்திருக்கிறது? செய்திகள் எட்டிதான் நாங்கள் குரல் கொடுக்க வேண்டுமா? மரணம் எனும் கோரம் முகத்தில் அறைந்தால் ஒழிய உணர்வு வராதா?

மரணத்தின் வாசம் முகர்ந்து மகிழ்பவனுக்கும், மரணத்தின் நெடி துளைத்தால் மட்டுமே அழுபவருக்கும் எனக்கு வேறுபாடு தெரியவில்லை. 25 ஆண்டு காலம்.. நாங்களும் நடத்தாத போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்கங்கள், பட்டினிப் போராட்டங்கள் இன்னும் என்னென்னவோ..

எதை விட்டு வைத்தோம்? இத்தனையும் போதாதென, இன்று முத்துக்குமார் தொடங்கி 13 பேர், அதற்கும் முன்பாக 1995-இல் அப்துல் ரவூப் என தன்னையே எரியூட்டி மாய்ந்த ஈகிகள்.

இவ்வளவுக்கும் பிறகும் எங்களால் சிங்களனையும் தடுக்க முடியவில்லை. அவனுக்கு உதவுபவர்களையும் தடுக்க முடியவில்லை. ஒருவேளை எங்கள் போராட்டத்தில் இன்னும் சற்று கூடுதலாக உண்மை வேண்டுமோ?
நீங்கள் இன்னமும் நம்பிக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.. எங்களின் போராட்டங்களும் ஆதரவும்தான் உங்களுக்கு பெரிய பலம் என்று. சாவை எதிர் நோக்கிய நிலையிலும் தளராது போராடும் உங்களின் உறுதிதான் எங்களையும் தொடர்ந்து போராடத் தூண்டுகிறது.

உங்களின் நம்பிக்கையை காப்பதற்காக இல்லை எனினும்.. எங்களின் குற்ற உணர்ச்சிக்கு பதில் சொல்லவாவது நாங்கள் போராடத்தான் வேண்டியிருக்கிறது. ஆம். எங்கள் கரங்களில் உங்களின் இரத்தம் வழிகிறது.
ஜானி, திலீபன், புலந்தி அம்மான், குமரப்பா, கிட்டு, இன்னும் எத்தனையோ போராளிகள் போதாதென்று, எத்தனை எத்தனை அப்பாவி மக்கள்.. பச்சிளம் குழந்தைகள். அமைதிப் படையாய் அழித்தது போதாதென்று இன்று ராடார்களும் நச்சு குண்டுகளும் கொடுத்து ஒட்டு மொத்தமான அழிவிற்கு காரணம் நாங்களும் தானே?

துடைக்க துடைக்க வழிகிறது இரத்தம். எத்தனை முறை கழுவினாலும் நிற்காது வழிகிறது. நச்சு குண்டுகளினாலும் இரசாயன குண்டுகளினாலும் உருகி மாண்ட குழந்தைகளின் சதைத் துணுக்குகள் எங்கள் நகக்கண்களில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. எத்தனை முறை உதறினாலும் விடாது பற்றி நிற்கின்றன.

"என்னய்யா .. இன்னும் 2 நாளுல எல்லாம் முடிஞ்சிடுமா" என்று கிரிக்கெட் ஸ்கோர் போல விசாரிக்கும் மனமற்ற சவங்களுக்கு நடுவே வாழ்வதன் பயனா இது?

முத்துக்குமாரை அப்படி ஒரு முடிவு எடுக்கத் தூண்டியது எது என இப்போது நன்றாகப் புரிகிறது. நம் வாழ்நாளில், நாம் அறிய, ஒரு மனிதப் பேரழிவிற்கு சாட்சியாக இருக்கப் போகிறோமா?

எல்லாம் முடிந்த பிறகு நமக்கு மிஞ்சுவதெல்லாம் ஒரு "கண்ணீர்க் கவிதை" தானா?மனசாட்சியின் கேள்விகள் துளைக்கின்றன. குற்ற உணர்ச்சியும் இயலாமையும் அழுத்துகின்றன.

கைகளிலிருந்து வழியும் இரத்தத்தின் ஒவ்வொரு துளியும் அமிலமாய் எரிக்கின்றது. நகக்கண்களில் ஒட்டி நிற்கும் சதைத் துணுக்குகளில் தெரியும் குழந்தைகளின் முகங்கள் மனதை நெருப்பாய் தகிக்கின்றன.
அன்பான உறவுகளே, அன் பிருந்து ஆக்கம் இல்லா கையறு நிலையில் நின்று உங்களிடம் பாவ மன்னிப்புக் கோருகிறேன்.

மன்னிப்பது உங்களால் இயலாத ஒன்றுதான். எனினும் ஒருவேளை நீங்கள் எங்களை மன்னிக்கவும் கூடும்.

ஆனால் வரலாறு ஒரு போதும் எங்களை மன்னிக்கப் போவதில்லை.

குற்ற உணர்ச்சியுடன்
தமிழக உறவு
( நன்றி - தென்செய்தி www.thenseide.com)
கடந்து செல்ல வேண்டிய தருணமும் சொல்ல வேண்டிய செய்தியும்... GTN ற்காக டி.அருள் எழிலன்:
சம காலத்தில் நாம் சந்தித்த மிகப்பெரிய இனப்படுகொலை ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அழித்து முடிக்கப்பட்ட ஒரு இனத்தை வெட்டி முடமாக்கி முகாம்களுக்குள் முடக்கியிருக்கிறார்கள்.

பேரினவாதிகள் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட ராஜீவ் படுகொலைக்கு பழிவாங்கும் விதத்தை நம்பும் படியாகவும் உணர்த்தும் விதமாகவும் நடத்தப்பட்டிருக்கும் இந்தப் பேரழிவு இந்தியாவின் ஆகப் பெரிய பாசிசப் படுகொலையாகும். நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை மறைக்க சிங்கள அரசு தமிழ் மக்களை உளவியல் ரீதியாக தாக்கியழிக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் இயலாமையால் அழுகிறார்கல். தமிழககமோ இறுக்கமான மொனத்தில் உறைந்திருக்கிறது. பெருந்தொகையான மக்கள் கூட்டம் காணாமல் போனது தொடர்பாக கேள்விகளை எழுப்ப வேண்டிய வட இந்திய அங்கில ஊடகங்களோ ஈழப் போரின் முடிவாக இதைக் கொண்டாடி மகிழ்கின்றன.
ஆங்கில ஊடகத்தின் தமிழகப் பிரிவில் வேலை பார்க்கும் எனது பெண் நணபர் ஒருவர் நேற்று என்னிடம் கேட்கிறார். மதிவதனி, துவாரகா, பொடி எல்லாம் எடுத்துட்டாங்களாமே? உங்களுக்குத் தெரியுமா?எங்கம்மா இறந்தது மட்டும்தான் எனக்குத் தெரியும் பிரபாகரன் இறந்தாரா? அவரது மனைவி இறந்தாரா? என்பதெல்லாம எனக்குத் தெரியாது? பொதுவாக இவர்கள் இறப்பதில்லை என்பது மட்டும் தெரியும். நீங்கள் டில்லி டெஸ்கிற்கு செய்தி கொடுத்து விட்டீர்களா? இலங்கை அரசின் ஆர்மி சைட்டில் இதை போட்டிருக்காங்களா? என்று கேட்டேன் அவரோ எங்க சேனல்ல ப்ளாஸ் நியூஸ் போகுது என்றார்.

எனக்கு எதுவும் அதிர்ச்சியாக இல்லை. சிறிது நேரத்தில் எஸ்,எம்,எஸ் ரூகள் தொலைபேசி அழைப்புகள் விசாரிப்புகள் எதுவும் அதிர்ச்சியாக இல்லை. கடந்த சில நாட்களாகவே இறுக்கமாக மட்டுமே இருக்க முடிகிறது தமிழக மக்களைப் போல,இலங்கையின தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரை இந்தியா நடத்துகிறது.

இலங்கை நடத்தி முடித்த இன அழிப்பின் பின்னரான உளவியல் சிதைப்புப் போரை இலங்கையின் தூதரகத் திட்டத்தோடு வட இந்திய ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. கடுமையான மனச்சிதைவுக்கு உள்ளாக்கப்படும் ஒரு இனத்திற்கு நம்பிக்கை ஊட்டும் எந்த நடவடிக்கைகளையும் தமிழக ஊடகங்கள் செய்யவில்லை என்பதோடு. தூதரக அதிகாரிகளோடு தமிழக ஊடகவியலார்களும் நெருக்கம் பேணினார்கள் என்பது மட்டும் தெரிகிறது.
வட இந்திய ஊடகங்கள் ஈழப் போரின் தோல்வியை இலங்கை சார்ந்த ஒன்றாக மட்டுமே பார்க்கவில்லை. அவர்கள் தமிழகத்தில் வாழும் ஏழு கோடி மக்களின் தோல்வியாகவே பார்க்கிறார்கள். இவர்களின் தோல்வி அவர்களுக்கு உற்சாகமாக இருக்கிறது
.

இந்து ராம். சோ ராமசாமி, சுப்ரமணியம் ஸ்வாமி போன்ற இலங்கை அரசின் நட்புச் சக்திகள் இந்தக் கொண்டாட்டங்களின் தமிழக முகங்களாகவோ முகவர்களாகவோ இருக்கிறார்கள்.

ஊடகங்கள் தமிழ் மக்கள் மீது தொடுத்திருக்கும் இந்தப் போர் காட்சி ஊடகங்கள் தொடங்கிய காலத்திலிருந்து தொடங்குகிறது. ஈராக்கிய யுத்தத்தின் போது எப்படி சி.என்.என் தொலைக்காட்சி அமெரிக்க பயங்கரவாதத்திற்கு வலது கரமாக இருந்து பிரச்சாரம் செய்ததோ அது போலவே சகல வட இந்திய ஊடகங்களும் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக மோசமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றன. இந்திய சமூக நீதி வரலாற்றில் இட ஒதுக்கீட்டு உரிமைப் போரில் எல்லாக் காலத்திலும் தமிழகமே முன்னணியில் நின்றது

. உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அமைச்சர் அர்ஜூன்சிங் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த போது வட இந்திய உயர்சாதி மாணவர்கள் துடைப்பங்களை எடுத்து நீங்கள் எல்லாம் டாகடருக்குப் படிக்க வந்தால் நாங்கள் தெருக்கூட்டப் போகிறோம் என்று வீதிக்கு வந்ததை மிகப் பெரிய போராட்டமாக சித்தரித்து அதை தமிழ் மக்களுக்கு எதிராக சித்தரித்ததும்.

ஓகேனக்கல் நீர் உரிமை தொடர்பான போராட்டங்கள் வெடித்த போது அதை தமிழ் சாவனிசம் என்று ஒடுக்கிய போக்கையும ; நாம் கடந்த காலத்தில் கண்டோம். அந்த தொடர் வன்மத்தின் வெளிப்பாடுதான் இன்றைய ஈழத் தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிற போக்கு.

பெருந ;தொகையான மக்களை இன அழிப்பு செய்து நிலத்திலிருந்து மக்களைப் பிரித்து அவர்களை முகாம்களுக்குள் முடக்கி இந்தியா இலங்கையில் ஆடியிருக்கும் நரவேட்டை ஒரு பக்கம் அந்தப் போருக்கு எதிராக தமிழக மக்கள் கொதித்தெழுந்த போது அதை ஒடுக்கி அச்சுறுத்தி அடக்கிய விதம் எல்லாம் சேர்த்து இன்று தமிழக மக்களிடம் இந்தியாவின் மீதான வெறுப்பு வளர்ந்திருக்கிறது. ( தேர்தல் வெற்றி எல்லாம் சும்மா சொல்வது அது குறித்து தனியாக எழுதுவேன்) மனுக்கொடுப்பது சத்தியாகிரகம் என்பது போன்ற ஐம்பதுகளில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வு என்னவாக இருந்ததோ அது போன்ற ஒரு உணர்வலை இன்று தமிழகத்தில் இருப்பதை மறுக்க முடியாது. இந்தியாவுக்கு எதிரான கடும் போக்கு தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. இதைத் தடுக்க முடியுமா? என்று தெரியவில்லை ஏனென்றால் குறைந்த பட்சம் போராடுகிற மக்களின் உணர்வுகளை ஆட்சியாளர்கள் மதித்திருக்க வேண்டும்.

தொடர் நாடகங்கள் மூலம் தேர்தல் வெற்றி கிடைத்த பிறகு இலங்கை பிரச்சனை தமிழகத்தில் ஒரு பிரச்சனையே அல்ல என்று செய்கிற உதாசீனம் இந்தியாவின் தேசீய மனோபாவத்தில் இருந்து தமிழக மக்களை வெகுவாக விலக்கிச் சென்று கொண்டிருக்கிறது. வெகுமக்கள் அரசியலில் தலைமைகள் இல்லாத சுழலில் அடிப்படை மாற்றத்திறாக போராடும் இடது அமைப்புகள் இந்த இளைஞர்களின் கோபத்தை அறுவடை செய்யக் கூடும்.ஏனென்றால் நான் சந்தித்த பெரும்பாலான உணர்வாளர்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள் அனைவருமே இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து காட்டும் இந்தப் படங்களை கடந்து செல்லவே விரும்புகிறார்கள்.

உயிரை காப்பாற்றக் கேட்ட மக்களுக்கு,
உணவு கேட்ட மக்களுக்கு,
போர் நிறுத்தம் கேட்ட மக்களுக்கு
தங்களால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்கிற அவமானமும் குற்ற உணர்ச்சியும்
ஏராளமான இளைஞர்களை கசக்கிப் பிழிகிறது. இந்த குற்ற உணர்ச்சியிலிருந்தே அவர்கள் அவலத்தைக் கடக்கிறார்கள். இந்தியா காட்டும் படங்களை உதாசீனப்படுத்துகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் முள்ளியவாய்க்காலில் கொல்லப்பட்ட ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகொலையில் தொடர்புடையவர்களை தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். போர்க் குற்றங்களை மறைத்து போட்டோக்களை வெளியிட்டு உலகத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்ற முடியாது என்பதுதான் நாம் சிந்திக்க வேண்டிய பகுதி.

நாஜிக்களின் கொலைகள நடந்து முடிந்த சில காலத்திற்கு அந்தக் கொலைக் கூடங்கள் குறித்த செய்திகள் எதுவும் உலகிற்குத் தெரியவில்லையாம். அங்கிருந்து தப்பி வந்த இருவர் கொடுத்த தகவலும். அறம் சார்ந்து எழுத நினைக்கும் சில ஆன்ம பத்திரிகையாளர்களாலுமே யூதப் படுகொலை உலகிற்கு வெளிக் கொணரப்பட்டது.

அன்றைய உலகச் சூழலில் இரு துருவ அரசியல் உண்மைகள் வெளிவர ஏதுவாக இருந்திருக்கலாம் ஆனாலும் நாம் ஆகக கூடிய சாத்தியங்களோடு இரண்டு மூன்று விஷயங்களைப் பேசியாக வேண்டும். ஒன்று பல்லாயிரம் பல்லாயிரமாய் கொல்லப்பட்ட மக்கள் குறித்த உண்மைகளை வெளிக் கொண்டு வந்து இலங்கை அரசை தண்டிக்க வேண்டும்.இந்தப் போரில் இந்தியாவின் கொலை வெறியை உலகுக்குச் சொல்ல வேண்டும்.இந்தப் போர் இன்னும் முடியவில்லை எனபதை சிங்கள பெரும்பான்மை வாதிகளுக்கும், அதிகாரப் பசி கொண்ட இந்தியத் தரப்பிற்கும ; சொல்ல வேண்டும் என்பதே எங்களை இப்போது ஆறுதல் படுத்தும்.
நன்றி :http://www.yarl.com/

GO BACK

Monday, May 18, 2009

புலிகளின் தலைமைத்துவம் பேணப்படாதவிடத்து உலக ஒழுங்கு நிர்மூலமாகக்கூடும்!
ஆய்வாளர்கள் எச்சரிக்கை

கூட்டுமன அதிர்விற்குள் ஒரு இனம்: தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போக்கு குறித்த ஒரு உளவியல் பதிவு

பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ்)
யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட்)
சித்ரலேகா துஸ்யந்தன் (வியன்னா)
பிரியதர்சினி சற்குணவடிவேல் (பர்சிலோனா)

தமிழீழ விடுதலைப் போராட்டம் எந்த வித மறு பேச்சிற்கும் இடம் வைக்காமல் முடிவடைந்து விட்டது அல்லது முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது அல்லது நீர்த்துப்போய் படிப்படியாக அந்த நிலையை அது எய்தும் என்று எதிர்வு கூறல்களாக அல்லாமல் அவை முடிவுகளாகவே முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு சூழலுக்குள் ஒரு இனத்தின் நீண்ட நெடிய போராட்டம் வந்து சேர்ந்திருக்கிறது.

போராட்டத்திற்கு வெளியே இத்தகைய சொற்பதங்கள் புழக்கத்திற்கு வந்து நீண்ட நாட்களாகிவிட்டன. ஆனால் துரதிஸ்டவசமாக நாமும் இவற்றை தற்போது உச்சரிக்கத் தொடங்கியிருக்கிறோம். அதன்வழி அவற்றை நம்பவும் தொடங்கியிருக்கிறோம் அல்லது நம்பும்படி கட்டாயப்படுத்தபடுகிறோம். ஒரு தமிழ் உயிரியின் ஒவ்வொரு கணமும் இத்தகைய நிர்ப்பந்தத்திலேயே கழிந்து கொண்டிருக்கிறது.

உண்மையிலேயே தமிழீழ விடுதலைப்போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதா? இந்த சிக்கலான கேள்விக்குள் நாங்கள் இறங்க விரும்பவில்லை. ஏனெனில் அது எமது வேலை இல்லை. அத்தோடு நாம் தீர்க்கதரிசிகளோ ஆருடக்காரர்களோ கிடையாது. படைத்துறை ஆய்வாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் பதில் தெரியாமல் "பேந்த பேந்த" முழித்துக்கொண்டிருக்கும் ஒரு விடயத்திற்குள் நுழைந்து எம்மைக் காயப்படுத்திக்கொள்ளவும் விரும்பவில்லை.

ஆனால் நாம் வேறு ஒரு கோணத்தில் இந்த வரலாற்றுக் காலகட்டத்தை ஆய்வு செய்ய முனைந்திருக்கிறோம். ஒரு வேளை மேற்கண்ட கேள்விக்கான பதிலை இந்த ஆய்வினூடாக நீங்கள் தரிசிக்கலாம். அதற்கு எந்த உத்தரவாதத்தையும் நாம் முன்கூட்டியே வழங்கவிரும்பவில்லை.

"தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதா?" என்ற கேள்வியைத்தான் மையப்படுத்தி நாங்களும் ஆய்வு செய்யப்புகுந்துள்ளோம். இது என்ன முரண்பாடு என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. இதில் எந்த முரண்பாடும் இல்லை. நாம் எல்லோரையும்போல் அந்தக் கேள்விக்குள்ளாக இறங்காமல் மேலும் கீழுமாக அதைச்சுற்றிப் பயணித்து அக் கேள்வியின் உருவாக்க நியாயங்கள் மீதும் எதன் அடிப்படையில் இது முன்மொழியப்படுகிறது என்பதனையும் ஒரு உளவியல் ஆய்வாக முன்வைக்க முனைந்துள்ளோம். இந்த ஆய்வு கூட எமக்கு முக்கியமனதல்ல. இதனூடாகக் கிடைத்திருக்கும் ஒரு உளவியல் வாசிப்பையே நாம் பிரதானப்படுத்த விரும்புகிறோம்.

இப்பரந்த பூவுலகில் ஒவ்வொரு மனித உயிரியும் தாம் எதிர்கொள்ளும் வாழ்வியல் புறநிலைக்கேற்ப பல கருத்துருவாக்கங்களினால் கட்டமைக்கப்படுகின்றன. இதன்வழி இப்பூமியில் கட்டவிழும் ஒரு நிகழ்விற்கெதிராக அல்லது அந் நிகழ்வு குறித்து ஒவ்வொரு உயிரியும் வேறுபட்ட பார்வையை அல்லது எதிர்வினையைப் பதிவு செய்கின்றன. இதை சற்று விரிவு படுத்தினால் இனம், மதம், மொழி, கொள்கை, கோட்பாடுகள் சார்ந்து குழுமங்களாகவும் ஒருமித்த - வேறுபட்ட கருத்துருவாக்கங்களும் உருவாகின்றன - மாற்றம் பெறுகின்றன.

பெண்ணியம், மானுடவியல், தத்துவம், சமூகவியல் சார்ந்த உளவியலை கல்விப்பின்புலமாகக் கொண்ட எமக்கும் உலக சமூக நிகழ்வுகள் குறித்த ஒரு வாசிப்பு இருக்கிறது. இதன் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முடிவு குறித்த பல பிதற்றல்களையும், உளறல்களையும் அதன்வழி தொடர் பதற்றத்திற்குள்ளாகியிருக்கும் ஒரு இனத்தின் அரற்றல்களையும் அங்கலாய்ப்புக்களையும் கவனத்தில் கொண்டு நீண்ட உரையாடல்களை நிகழ்த்தி விவாதித்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் போக்கு குறித்த ஒரு கருத்துருவாக்கத்தினைப் பெற்றிருக்கிறோம்.

இக் கருத்துருவாக்கத்துடன் யாரும் முரண்படலாம். நாம் அதை மறுக்கவில்லை. ஆனால் இதன் பெரும்பான்மை சாத்தியங்களை யாரும் மறுதலிக்க முடியாது. நாம் இந்த ஆய்வை இன்னும் முழுமையாக நிறைவு செய்யவில்லை. இதை அனைத்துலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாக தமிழ்ச்சூழலுக்கு உடனடியாகக் கொண்டு வருவதன் நோக்கம் சில மணித்தியாலங்களை போரின் இறுதி வெற்றிக்கான காலக்கெடுவாக அறிவித்துவிட்டு மிக மோசமான இனச்சுத்திகரிப்பில் இறங்கியிருக்கும் ஸ்ரீலங்கா அரசின் கபடத்தனத்தை நாம் புரிந்து கொள்வதுடன் எம்மிடையே தோன்றியிருக்கும் சில நம்பிக்கையீனங்களிற்கும் அடிப்படை புரிதலின்மைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கேயாகும். இவை குறித்த சரியான புரிதலில்லாவிட்டால் நாம் தொடர்ந்து உலகத்துடன் பேச முடியாது- எமது தொடர் போராட்டங்களுக்கும் ஒரு அர்த்தம் இருக்காது.

உண்மையிலேயே இவை குறித்து எமக்குள்ளாகப் பேசிக் கொள்ளத்தேவையில்லை. ஏன் எமது எதிரிகளான ஸ்ரீலங்கா அரசிற்குக் கூட எந்தச் செய்தியும் இதற்குள் இல்லை. மாறாக இந்தக் கருத்தியலை கவனத்தில் கொள்ள வேண்டியவர்கள் எமது போராட்டத்தின் மீது ஆதிக்கம் nசுலுத்தும் மூன்றாவது சக்திகளான இந்தியாவும் மேற்குலகமும்தான். ஏனெனில் நாளை ஒரு இனத்தின் எதிர்வினைக்குள் சிக்கி விளைவுகளை அறுவடை செய்யப்போவது அவர்கள்தான்.

சிலவற்றை வெளியாகப் பேசிவிட வேண்டியதுதான். எந்த பூசிமெழுகல்களும் பாசாங்குகளும் இனி வேலைக்கு உதவாது. எமது ஆய்வின் முடிவு பயங்கரமானது மட்டுமல்ல பெரும் அச்சம் தருவதும் உலக ஒழுங்கை நிர்மூலமாக்கக்கூடியதும்கூட. அதாவது ஒற்றை வரியில் சொன்னால் மூன்றாவது சக்திகளின் துணையுடன் படைத்துறை ரீதியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படுமாயின் அல்லது தோற்கடிக்கப்படுவது போன்ற பாவனைகளையும் உளறல்களையும் அனைத்துத் தரப்பும் தற்போதுள்ளதுபோல் தொடருமாயின் எந்த கணத்திலும் இந்த உலகத்தின் மீது பல வடிவங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதற்கு தமிழ் இனம் தன்னையறியாமலேயே தயாராகிக் கொண்டிருக்கிறது. அதன் வன்முறை வடிவங்களைக்கூட நாம் இனங்கண்டிருக்கிறோம்.

உடனடியாக போரை நிறுத்தி தமிழீழ விடுதலைப்புலிகளின் ஏபிரநிதித்துவத்தை ஏற்று தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படாதவிடத்து தமது பிராந்திய மேற்குலக நலன்கள் சார்ந்து தமே தம்மைச்சுற்றி வரைந்து வைத்திருக்கும் உலக ஒழுங்கைக் காப்பாற்ற ஒரு சிறிய விடுதலைப்போராடத்தினதும் அதன் மக்களினதும் அழிவுக்கு எந்த மூன்றாவது சக்திகள் துணைபோனதோ அந்த உலக ஒழுங்கை அழிவுக்குள்ளான அந்த இனம் வன்முறை, பயங்கரவாத வடிவங்களினூடக சிதைத்து சின்னாபின்னப்படுத்துவதை இந்த உலகம் எதிர்கொள்வதைத்தவிர வேறு மாற்று விளைவுகள் கிடையாது. ஏனெனில் அந்த இனம் தனது சுய நனவு மனத்திலிருந்து விடுபட்டு - வெளியெடுக்கப்பட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. அதாவது அது ஒரு கூட்டு மன அதிர்விற்குள் தள்ளப்பட்டிருக்கிறது.

நாம் இந்த ஆய்வை செய்ய புகுந்த கதையை சுருக்கமாவேனும் விளக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் தமிழர்களாக இருந்தபோதிலும் எமது வாழ்வை தமிழ்ச்சூழலுக்கு வெளியிலேயே கட்டமைத்துக்கொண்டவர்கள். (இதில் விதிவிலக்கு நண்பர் பரணி கிருஸ்ணரஜனி - அவர் தொடர்ந்து தமிழ்ச்சூழலில் இயங்கி வருபவர்) காரணம் எமது கல்விப்பின்புலம், தொழில் சார்ந்த நடைமுறைகளும் குறிப்பாக சுயநலன்களும் என்று கூறலாம். தமிழர்களாக இருந்தும் எமது இனத்தின் போராட்டத்தை செய்தியாகவே அறிந்து கொள்ள முற்பட்டவர்களாக இருந்தோமேயொழிய பங்குதாரர்களாக நாம் இருக்கவில்லை. இப்போது அதற்காக நாம் வெட்கப்படுகிறோம் - வேதனைப்படுகிறோம்.

திடீரென்று நாம் எம்மை தமிழர்களாக உணரத்தொடங்கியது ஒரு இனம் அழியத்தொடங்கியதிலிருந்துதான் என்பது வேதனைக்குரியது மட்டுமல்ல வெட்கத்திற்குரியதும்கூட. நாம் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் புலிகள் பார்த்துக்கொள்வார்கள் அவர்கள் போராடி ஈழம் எடுத்த்துத்தருவார்கள்தானே என்று இருந்துவிட்டோம். இது எமது நிலைப்பாடல்ல, பலரதும் நிலைப்பாடும் இதுதான்.

இந்த மனோநிலையில்தான் இதுவரைகாலமும் இருந்திருக்கிறோம் என்பதையே எமது ஆய்வினூடகத்தான் நாம் கண்டுபிடித்தோம் என்பதே ஆச்சரியமாக மட்டுமல்ல அதிhச்சியாகவும் இருக்கிறது.

தமிழீழ விடுதலைப்புலிகளை படைத்துறை ரீதியாக தோற்கடிப்பதாகவும், தொடர்ந்து நிலங்களை கைப்பற்றுவதாகவும் ஸ்ரீலங்காக அரசு அறிவித்ததோடு மட்டுமல்ல பல மூன்றாம் சக்திகளின் துணையுடன் உலக அளவில் அவர்களுக்கு பயங்கரவாத முத்திரைகளைக் குத்தி அவர்களை ஓரங்கட்டத்தொடங்கியிருந்ததும் ஒட்டு மொத்த தமிழர்களையும் ஒரு வித வெறுமைக்குள் தள்ளி பதற்றமடையச் செய்திருந்ததை அப்போது உணராதவர்களும் இப்போது உணர்கிறார்கள். இதைத்தான் கூட்டுமன அதிர்வு என்ற உளவியல் சிக்கலாக விளக்க முற்படுகிறோம்.

விடுதலைப் போராட்டத்தோடு தம்மை தாயகத்திலும் புலத்திலும் நேரடியாக ஈடுபடுத்திக்கொண்டவர்கள் மட்டுமின்றி எம்மைப்போன்றிருந்த ஈழத்தமிழர்கள் உட்பட உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகள் அனைத்துமே என்னவென்று அறியாமலேயே இந்த கூட்டுமன அதிர்வுக்குள்ளாகியதுதான் ஆச்சர்யம். தமிழகம் மட்டுமின்றி தென்னாபிரிக்கா, மலேசியா, மொறீசியஸ், பிஜித் தீவுகள் என்று ஒரு இனமே அதிர்ந்தது - இன்னும் அதிர்ந்து கொண்டிருக்கிறது. உலகின் சட்ட ஒழுங்குகளையும் மீறி நாம் இன்று வீதியில் இறங்கியிருப்பதே அதற்கு சாட்சி.
ஆயிரக்கணக்கான பக்கங்களில் நிறைந்து கிடக்கும் எமது ஆய்வை சுருக்கமாக இங்கு விளக்குவது கடினமானது மட்டுமல்ல பல உளவியல் வார்த்தைகளுக்கு தமிழில் விளக்கமும் கிடையாது. அதைத் தொடர்ந்து விளக்குவது உங்களுக்கு அயர்ச்சியையும் தரும். சுருக்கமாக சிறிய விளக்கங்களையே நாம் உங்கள் முன் வைக்க விழைகிறோம்.

இந்த கூட்டுமன அதிர்வுக்கு ஓரே காரணம் எதிரி நிலத்தை விழுங்கியதோ மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதோகூட அல்ல. பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் தலைமைத்துவம் கைநழுவிக்கொண்டிருப்பதாகவும் தமது தலைமையை எதிரியானவன் பலருடன் கூட்டுச்சேர்ந்து அழிக்க முற்படுகிறான் என்றும் எல்லைகள் கடந்து ஒட்டுமொத்த தமிழினமும் நம்பத் தொடங்கியதுதான் இக்கூட்டுமன அதிர்வின் முதன்மையான காரணம் ஆகும். எமது ஆய்வின் மிக முக்கியமான அம்சம் இது.

தேசம், தேசியம், தேசியத் தலைவர் என்று ஒரு இனம் மூன்று தசாப்பதங்களுக்கும் மேலாக ஒரு வாழ்வை வாழ்ந்து விட்டது. அந்த வாழ்வியலினூடாகவே அந்த இனத்தின் உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த இனத்தின் ஆன்மாவாகவே விடுதலைப்புலிகள் மாறிப்போய்விட்டது யதார்தம். இது விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால் நடந்தேறிவிட்டது. திடீரென்று கொஞ்சப்பேர் வெளிக்கிட்டுவந்து ஆளாளுக்கு வன்முறை, பயங்கரவாதம், மனிதக் கேடயம் என்று அந்த இனத்திடம் எந்தக் கருத்தையும் கேட்காமல் மிக மோசமான வன்முறையை அந்த இனத்தின் மீது பிரயோகித்துக்கொண்டே அந்த மூன்று தசாப்த கால வாழ்வைக் குலைப்பதென்பது மிக அப்பட்டமான மனித உரிமை மீறலும் மிகமோசமான வன்முறையுமாகும்.

புலிகளையும் தமிழினத்தையும் பிரித்துக் கருத்துச் சொல்லும் யாருமே அந்த இனத்தைப் பொறுத்த வரையிலே வன்முறையாளர்களே. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் சரி ஐரோப்பிய ஒன்றியமும் சரி யாரும் விதிவிலக்காக முடியாது.

இதைத்தான் எமது ஆய்வில் கடுமையாக முன்வைக்க விரும்புகிறோம்.
அண்மையில் கனடாவிலிருந்து வெளிவரும் "NATIONAL POST" மக்களின் போராட்டங்களை முன்வைத்து ஒரு சந்தேகத்தைக் கிளப்பியிருந்தது. அது தமிழர்கள் தமது போராட்டங்களில் புலிகளின் கொடியையும் அதன் தலைவரினது படங்களையும் வைத்திருப்பதைப் பார்த்தால் மக்களைக் காப்பாற்றுவதற்கு போராட்டங்களை நடத்துவது போல் தெரியவில்லை, மாறாக தடைசெய்யபப்பட்ட பயங்கரவாத இயக்கமான புலிகளைக் காப்பாற்றவதற்கே இந்த போராட்டங்கள் நடத்தப்படுவதாக சந்தேகம் வெளியிட்டிருந்தது.

"NATIONAL POST" உட்பட எல்லோருக்கும் ஒன்றைக்கூறிக் கொள்ள விரும்புகிறோம். உங்களுக்கு எந்தச் சந்தேகமும் தேவையில்லை, தமது அரசியல் தலைமைகள் என்று ஒட்டு மொத்த இனமுமே நம்புகிற புலிகளைக் காப்பதற்கும் அவர்களுக்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை வாங்கித் தருவதற்குமாகவே மக்கள் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். இதில் நீங்கள் புதிதாக எந்தக் கண்டுபிடிப்பையும் செய்யத் தேவையில்லை.

முப்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு இனம் படிப்படியாக வளர்த்த நம்பிக்கையும் அரசியல் அவாவும் புலிகளின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தது. அதன் பெருபிம்பமாக தலைவர் பிரபாகரனை அந்த இனம் வரித்து நீண்ட காலங்களாகிவிட்டது. இதை உளவியல் மொழியில் கூறினால் ஒவ்வொரு தழிழனினதும் உள்ளத்தில் அவர்களது அரசியல் அவா பிரபாகரன் என்ற உருவத்திலேயே ஆன்மாவாக உறைந்து கிடக்கிறது. அவரையும் அவர் உருவாக்கி வளர்த்த அரசியல் கட்டமைப்பையும் அழிப்பதென்பது ஒவ்வொரு தமிழனினதும் ஆன்மாவில் கைவைப்பதற்கு ஒப்பானது. அதுதான் இப்போது ஒட்டுமொத்த இனமும் அதிர்வுக்குள்ளாகியிருக்கிறது.

இந்த அடிப்படையில்தான் நாம் எமது ஆய்வை வளர்த்துச் சென்று ஒரு கருத்துரலவாக்கத்தைப் பெற்றிருக்கிறோம். இனி நாம் விடயத்திற்குள் நுழைவோம்.
மேற்படி விளைவுகளின் காரணமாக கடந்த ஒரு வருடமாக ஒருவிதமான வெறுமைக்குள் தள்ளப்பட்டவர்களாக அலைந்து திரிந்த நாம் எமது பிரச்சினையை கண்டுபிடித்ததும் இந்த ஆய்வைச் செய்ய வேண்டும் என்று தூண்டியதும் ஒரு கருத்தரங்கு என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

அண்மையில் ஸ்பெயின் பர்சிலோனா பல்கலைக்கழகத்தில் "Psychology of crime : Several psychological factors that figure into why people commit crimes" என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கே அது. "பெண் உளவியல்" தொடர்பான எமது மேலதிக ஆய்வுகளின் பயன்பாட்டிற்கமையவும் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத்திற்கும் உளவியலுக்கும் இடையிலான தொடர்பை முன்னிறுத்தி கலாநிதி பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கும் எமது தோழி ஒருத்தியின் நச்சரிப்பு தாங்காமாலும் நாங்கள் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டோம்.

தனிமனித குற்றங்கள் எப்படி சமூக குற்றங்களாக மறுஉருவாக்கம் செய்யப்படுகின்றன என்பதிலிருந்து தொடங்கி வன்முறை, பயங்கரவாதம், உளவியல் ஆகியவற்றிற்கிடையேயான பிணைப்பையும் தொடர்பையும் மிகத்துல்லியமாக வரையறை செய்தது மேற்படி கருத்தரங்கு.

குற்றங்களின் மூலமும் அடிப்படையும் மனச்சிதைவிலிருந்து அல்லது மனப் பிறழ்விலிருந்துதான் தோற்றம் கொள்வதாக உளவியல்வாதம் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் தனிமனிதன் தொடங்கி அரசு, நிறுவனங்கள் வரை இதைப் பெரும்பாலும் கணக்கிலெடுப்பதில்லை. இதை வேறொரு மொழியில் கூறினால் தமது வசிதிக்கேற்ப மறந்து விடுகிறார்கள் என்று நாம் கூறிக்கொள்ளலாம்.

குற்றம் என்ற பொது வகைமைக்குள் தனிமனித குற்றம், சமூக குற்றம், போராட்டம், ஆயுதக்கிளர்ச்சி, வன்முறை, பயங்கரவாதம் என்ற தனி அலகுகளாகப் பிரித்து அவற்றின் உளவியல் பிரதிபலிப்பையும் தாக்கங்களையும் ஆய்வாக முன்வைத்தது மேற்படி கருத்தரங்கு.

உண்மையைக் கூறப்போனால் சிக்மன்ட் பிராய்டையும் லக்கானையும் அதன் வழி சர்த்தரையும் கற்றுத் தெளிந்த ஒருவருக்கு மேற்படி ஆய்வுகள் புதிதாக எதனையும் கற்பிக்கப் போவதில்லை. இன்றைக்கு 50 வருடங்களுக்கு முன்பே தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே "பயங்கரவாதமாக" வெளிப்படுபகிறது என்று சர்த்தர் வரையறை செய்து விட்டார். மேற்படி கருத்தரங்கு அதை மீண்டுமொரு முறை மறுபதிப்பு செய்திருக்கிறது என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம்.

இந்தக் கருத்தரங்கிள் முடிவில்தான் நாம் "கூட்டு மன அதிர்வு"க்குள்ளாகயிருக்கிறோம் என்பதையே கண்டுபிடித்தோம்.
அண்மைக்காலமாக மோசமடைந்து வரும் களநிலவரங்களினால் தமது அரசியல் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையும் அதனால் தோற்றம் கொண்டிருக்கும் அரசியல் வெறுமையும் - வறுமையும் ஈழத்தமிழினத்தை எல்லையற்ற தொடர் கிலிக்கும் பீதிக்குள்ளும் அமிழ்த்திக்கொண்டிருக்கிறது. இதன் நிமித்தமாக ஈழத்தமிழினத்தின் உள்ளும் புறமுமாக ஒரு தொடர் வலைப்பின்னலாக பின்னப்பட்டுக்கொண்டிருக்கும் எண்ணற்ற கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் ஒரு பதிலாக இல்லாவிட்டலும்கூட, அறத்தையும் நீதியையும் நழுவவிட்டு எம்மை இவ்விக்கட்டான நிலைக்குள் தள்ளியிருக்கும் அனைத்துலக சமூகத்தைத் தொடர்ந்து எதிர்கொள்வதற்கும் அதற்கு எம்மால் தொடர்ந்து
சொல்லப்படக்கூடியதுமான சில முன்முடிவுகளை - தீர்மானங்களை மேற்படி கருத்தரங்கு அடையாளம் காட்டியது. அந்த வகையில் மேற்படி கருத்தரங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. இதிலிருந்து எமது ஆய்வை நாம் மேற்கொள்ளத் தொடங்கினோம்.

நாம் இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட நோக்கத்திற்கு மாறாக மேற்படி சங்கதிகளை அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. ஒரு வகையில் இவற்றைத்தான் தேடி அங்கே போனோமோ என்ற சந்தேகம் எமக்கே இப்போது எழுகிறது. ஏனெனில் மனம் ஒரு நிலையில் இல்லை. இது எமது நிலை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழினத்தின் நிலை இன்று இதுதான்.
உளவியலில் ஒரு நிலை இருக்கிறது. ஒரு மனித உயிரி தன்னளவில் தான் சக மனிதர்களாலும் தான் வாழும் சமூகத்தாலும் நிராகரிக்கப்படுவதாக, புறக்கணிக்கப்படுவதாக, ஒதுக்கப்படுவதாக உணரும்போது அல்லது அவ்வாறு எண்ணத்தலைப்படும் போது ஒரு வகையான வெறுமைக்கும் தனிமைக்குள்ளும் தள்ளப்படும் நிலை தோன்றுகிறது. அந்த நிலையில் அந்த மனித உயிரி அடையும் உளவியல் சிக்கலை "Schizoid" என்று உளவியல் மொழியில் அழைப்பார்கள். இந்த நிலை தொடருமானால் மீளமுடியாத மனப்பிறழ்வுக்குள் அந்த மனித உயிரி தள்ளப்படுவதை நாம் தொடர்ந்து அவதானிக்கலாம். Paul Eugen Bleuler என்ற உளவியல் நிபுணர் இன்றைக்கு 100 ஆண்டுக்கு முன்பே மனித மனம் தொடர்பாக கண்டடைந்த உண்மை இது.

இந்நிலையினூடாக ஒரு உயிரிக்கு உள்ள பெரும்பான்மை சாத்தியம் மீளமுடியாத மனப்பிறழ்வு நிலை அதன்வழி தற்கொலை அல்லது குற்றம் மட்டுமே... இதன் அடிப்படையில்தான் குற்றங்களின் மூலமும் அடிப்படையும் மனச்சிதைவிலிருந்து அல்லது மனப் பிறழ்விலிருந்துதான் தோற்றம் கொள்வதாக உளவியல்வாதம் கட்டமைக்கப்படுகிறது. எனவே ஒரு குற்றத்திற்கு என்று அடிப்படையும் ஒரு மூலமும் இருக்கின்றது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்வோம். மேற்படி கருத்தரங்கு இதைத்தான் பல தலைப்புக்களில் பேச முற்பட்டது.

நாம் பயங்கரவாதத்திற்கும் உளவியலுக்கும் உள்ள தொடர்பை மட்டும் இங்கு
விவாதிப்போம். (ஏனென்றால் நாங்கள் "பயங்கரவாதிகள்"தானே.. இந்த கேடுகெட்ட உலகம் அப்படித்தானே சொல்கிறது) பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு ஏகப்பட்ட குழப்பமான விளக்கங்களை இந்த உலகம் முன்வைக்கிறது. எது பயங்கரவாதம் என்பதில் அதை உச்சரிக்கிறவர்களுக்கே குழப்பமான ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன என்பதுதான் இங்கு கவனிக்கப்படவேண்டியது. அரசுகள்கூட பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன என்பது இங்கு ஏற்கனவே நிருபிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நாம் இதில் ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்வோம்.

பயங்கரவாதம் என்பது பல தருணங்களில் தனிமனிதர்களால் நிகழ்த்தப்பட்டாலும் அது தனிமனித நிகழ்வு அல்ல. எந்த தனி மனிதனும் இங்கு "பயங்கரவாதி"யாக அறியப்பட்டது கிடையாது. அவன் தான் சார்ந்துள்ள ஒரு அமைப்பிற்காக - ஒரு சமுதாயத்திற்காக - இனக்குழுமத்திற்காக என்று ஒரு பொதுச் சிந்தனையின் அடிப்படையிலேயே அந்த செயலை செய்ய முற்படுகிறான். அந்த நோக்கம் சரியானதா தவறானாதா என்பது இங்கு வேறு ஒரு தளத்தில் தனியாக விவாதிக்கப்பட வேண்டியது. ஆனால் அவனது நோக்கம் பொதுமையானது என்பதுதான் இங்கு முக்கியமானது.

இதைத்தான் சர்த்தர் தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே "பயங்கரவாதமாக" வெளிப்படுகிறது என்றார். எனவே ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுமத்தை தொடர் வன்முறைக்குள் அமிழ்த்தி தொடர்ந்து அந்நிலைக்குள்ளிருந்து வெளியேற விடாமல் - வழி தெரியாமல் மனஅதிர்வுக்குள்ளாக்கி அந்தக் குழுமத்தை மனப்பிறழ்வடையச் செய்யும்போது அந்நிலைக்கு ஒரு எதிர்வினையை அக்குழுமம் பதிவு செய்த போது அதை இந்த கேடு கெட்ட உலகம் "பயங்கரவாதம்" என்று பெயர் சொல்லி அழைக்கிறது. இங்கு அந்த குற்றத்தின் மூலமும் அடிப்படையும் காரண காரியங்களும் அடியோடு மறைக்கப்பட்டது மட்டுமல்ல அந்தக் குற்றவாளிகளை( அரச பயங்கரவாதிகளை) காப்பாற்றும் உலக ஒழுங்கும் வேதனைக்குரியது என்பதுடன்

அச்சமூட்டக்கூடியதும்கூட...

இந்த ஒட்டு மொத்த சாராம்சத்துக்குள்ளிருந்துதான் நாம் இந்த உலகத்தோடு பேசவேண்டிய - அழுத்தமாகச் சொல்லவேண்டிய முக்கிய பேசுபொருள் வருகிறது. நாங்கள் முன்பே குறிப்பிட்டது போல் அக் கருத்தரங்கில் நாம் கலந்து கொண்ட நோக்கத்திற்கு மாறாக எதை எதையோ கண்டடைந்தோம். ஏனெனில் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தில் நாங்களும் ஒரு அங்கம். இப்போது முழுத் தமிழினமுமே அதிர்வுக்குள்ளாகியிருக்கிறது. ளுஉhணைழனை என்ற உளவியல் சொல்லாடல் ஒரு தனிமனித உயிரியின் மனப்பிறழ்வு நிலை குறித்துப் பேசுகிறது. இங்கே ஒட்டு மொத்த இனமுமே அத்தகைய நிலைக்குள்ளாகித் தவிக்கிறது. இதைத்தான் நாம் இப்போது கூட்டு மன அதிர்வு என்ற சொல்லாடலுக்குள் கொண்டு வருகிறோம்.

நாம் இந்த உலகத்தால் வஞ்சிக்கப்படுகிறோம், தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோம், நாம் புறக்கணிக்கப்படுகிறோம், ஒதுக்கப்படுகிறோம் என்று ஒட்டு மொத்த உலகத் தமிழினமுமே அச்சம் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. தமது அரசியல் வாழ்வியல் எதிர்காலத்தை ஒரு சூனிய வெளியில் வைத்தே புரிந்து கொள்ளத் தலைப்படுகிறது. இதன் வழி முழுத் தமிழினமும் கூட்டு மன அதிர்வுக்குள்ளாகித் தவிக்கிறது.இப்போது சர்த்தாரை மீண்டும் ஒரு முறை அழைப்போம். அவர் சொல்கிறார்,"தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே "பயங்கரவாதமாக" வெளிப்படுகிறது".

உண்மையில் இந்தக் ஆய்வுக்கு "புலிகளின் அழிவுக்குப் பின்னான பயங்கரவாதத்திற்கு யார் பொறுப்பு?" என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும். ஏனெனில் புலிகளுக்கு "பயங்கரவாதப்" பட்டத்தை சுமத்தி ஒட்டு மொத்த தமிழினத்தையும் அழித்துக் கொண்டிருக்கும் சிங்களத்திற்கும் அதன் பின் நிற்கும் இந்தியா உட்பட மேற்குலத்திற்கும் ஒரு சிறிய செய்தி இருக்கிறது. அதாவது புலிகளின் அழிவுக்குப்பிறகும் நீங்கள் வரைவிலக்கணப்படுத்தி வைத்திருக்கும் "பயங்கரவாதம்" இருக்கும். அதுதான் அந்த செய்தி. எமது ஆய்வின் "பயங்கரமான" செய்தியும்கூட.

ஏனெனில் முழு இனமுமே அதிர்வுக்குள்ளாகத் தொடங்கியிருக்கிறது. அது ஒரு கட்டற்ற வன்முறையை எந்த நேரமும் யார் மீதும் பிரயோகிக்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதாவது உளவியல் வாய்ப்பாட்டிற்கமைய இந் நிலையை வரைவிலக்கணப்படுத்தினால் அது ஒரு கூட்டு "Schizoid" நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. "Schizoid" என்ற மனப்பிறழ்வின் உச்சநிலை தற்கொலை அல்லது குற்றம். தமிழினம் நாளை இரண்டில் எந்த முடிவை எடுக்கப்போகின்றது என்பதை தீர்மானிக்கப்போகிறவர்கள் சிங்களத்தின் அரச பயங்கரவாதத்திற்கு துணைநிற்கும் அனைத்துசக்திகளும்தான். தற்கொலைகள் தொடங்கிவிட்டது. குற்றங்கள்தான் மீதமிருக்கின்றன...

இப்போது ஒட்டுமொத்த தமிழினமும் இந்த கூட்டு மன அதிர்வு என்ற வரையறைக்குள் எப்படி வந்தது என்பதை நாம் முதலில் பார்ப்பது நல்லது. இது முக்கியமானது மட்டுமல்ல வரலாற்று ரீதியான பல உண்மைகளையும் உள்ளடக்கியது.

தமிழர்களின் போராட்ட சக்திகளான தமிழீழ விடுதலைப்புலிகளை ஒரு சமாதான காலத்தில் "பயங்கரவாதிகள்" என்று இந்த மேற்குலகம் அறிவித்ததிலிருந்துதான் இந்த அதிர்வு தொடங்கியது. போராடும் காலத்தில்கூட இத்தகைய அறிவிப்பை வெளியிடாத மேற்குலகம் ஒரு சமாதான காலத்தில் இந்த நயவஞ்சக நாடகத்தை அரங்கேற்றியபோது தொடங்கிய இந்த மன அதிர்வுக்கான முதற் பொறுப்பாளிகள் அவர்கள்தான். சிறீலங்கா அரசின் குருரமான கபட நாடகத்தில் மேற்குலகமும் தம்மை ஒரு பங்காளிகளாக்கிவிட்டனவோ என்ற அச்சம்தான் இக்கூட்டுமன அதிர்வின் முதற் புள்ளி.

மேற்குலகத்தின் இந்த மோசமான பொறுப்பற்ற நடவடிக்கைகளை சிறீலங்கா இனவாத அரசு தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு மேற்குலகம் வழங்கிய ஆசீர்வாதமாகவும் அங்கீகாரமாகவும் கருதியதில் வியப்பேதும் இருக்க முடியாது.தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திலுள்ள "பயங்கரவாத" கூறுகளை அடையாளங் காணத் தலைப்பட்ட மேற்குலகம் அதன் பின்னுள்ள அறத்தையும் நியாயத்தையும் சீர் தூக்கிப் பார்க்க தவறியிருந்தது. அன்றைய உலக ஒழுங்கும் அதற்கு இடமளித்தது துரதிஸ்டவசமானது.

நாம் மீண்டும் ஒரு முறை சர்த்தரை அழைப்போம். அரச வன்முறைக்குள்ளாகி நிர்க்கதியாகி நிராயுபாணிகளாக இருக்கும் மக்களின் ஒரே ஆயுதம் பயங்கரவாதம் மட்டுமே என்று வாதிடும் ளயசவசந ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதக்கிளர்ச்சிக்கு ஒரு புதிய வடிவத்தையும் தருகிறார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தோற்றுவாயும் அவர்களின் போராட்ட வழி முறைகளில் காணப்பட்ட "பயங்கரவாத" கூறுகளும் சர்த்தரின் எந்த வியாக்கியானத்தையும் மீறியதல்ல. அவ்வளவு ஏன் இன்றுகூட அந்த கருத்தரங்கின் முன்மொழிவும் புலிகளின் போராட்டத்தின் வழி முறைகளை சமன்செய்பவையேயாகும்.

சர்த்தரின் மேலதிக கூற்றுப்படி, தொடர்ந்து புதுப்பிக்கப்படும் அடக்குமுறைகள் ஒரு இனத்தை அடி பணியச் செய்வதற்கு பதிலாக தாங்கிக் கொள்ள முடியாத முரண்பாட்டிற்குள் அழுத்துகின்றன. இதற்குத்தான் அவர்கள் பதில் சொல்கிறார்கள். அவமானமும் பசியும் வலியும் என்னவென்று அவர்களுக்கு ஆக்கிரமிப்பாளன் கற்பித்த போது எழுந்த அழுத்தத்திற்கு சமமான சீற்றமான உணர்வை இன்று அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இப்போது அவர்களை பயங்கரவாதிகள் என்கிறார்கள். அவர்களுக்கு வன்முறையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்றும் சொல்கிறார்கள். ஆமாம், உண்மைதான். ஆனால் ஆரம்பத்தில் அது எதிரியினுடையது. விரைவில் அவர்கள் அதை தமதாக்கிக் கொண்டார்கள். உண்மையைச் சொல்லப்போனால் அவர்கள் வன்முறையின் குழந்தைகள் - இதன் வழி தமிழர் சேனைகளான தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறையின் குழந்தைகள்.

இதன்வழி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வன்முறை வடிவத்தையும் அதன் வடிவ மாறுதலையும் இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.எனவே தமிழீழ விடுதலைப் பேராட்டத்திற்கோ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கோ சூட்ட வேண்டியது "பயங்கரவாத" பட்டங்கள் அல்ல... தமிழினத்திற்கான அரசியல் தீர்வு. மக்களிலிருந்துதான் புலிகள் பிறப்பெடுத்தார்கள். புலிகளை பயங்கரவாதிகள் என்பதற்கும் தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்பதற்கும் ஒரு மெல்லிய கோடு இடைவெளியேயுள்ளது.

ஏனெனில் அவர்கள் தமிழர்களின் விடுதலைக்காக ஆயுதம் தரித்திருக்கிறார்கள். அதற்கான அனுமதியையும் ஆசீர்வாதத்தையும் மக்கள் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். இந்த இடைவெளியைத் தவிர வேறு எந்த இடைவெளியும் இரு தரப்பையும் பிரித்துப் பார்க்க உதவாது. அந்த மெல்லிய கோட்டைக்கூட அனைத்துத் தரப்பும் இன்று மெல்ல மெல்ல அழிக்கத் தொடங்கியிருக்கிறது. ஏனெனில் எல்லோருமே வன்முறையார்களாக மாற வேண்டிய இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது தமிழினம்.

இன்று அனைத்துத்தரப்பும் சொல்வது போல் புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்படுமாயின் புலிகளில்லாத ஒட்டு மொத்த தமிழினமும் பிரயோகிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் அந்த வன்முறை வடிவங்களை எதிர்கொள்வதற்கு உலகம் தன்னை தயார் செய்வது நல்லது... இது குறித்து அடுத்த வாரம் எழுதுகிறோம்...

000000000000000000000000000000000000000000
புலிகளின் தலைமைத்துவம் பேணப்படாதவிடத்து உலக ஒழுங்கு நிர்மூலமாகக்கூடும்!ஆய்வாளர்கள் எச்சரிக்கை
தமிழ்ச்சூழலைச் சேர்ந்த உளவியலை கல்விப்பின்புலமாகக் கொண்ட சில பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகச் செய்த சுயாதீன ஆய்விலிருந்து மேற்படி எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. தொடர் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் அவர்கள் காலத்தின் தேவை கருதி தமது ஆய்வின் முக்கிய விடயங்கள் தொடர்பாக சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறார்கள்.
.
Contact details : educationfeminism@yahoo.com
P_krishnarajanifeminist@yahoo.com
http://www.pathivu.com/news/1884/54//d,view.aspx

சிறீலங்கா அரசின் பொய்யான பரப்புரைகள்
அன்பான தமிழ மக்களே! விசமிகளின் பொய்ப் பரப்புரையை நம்பவேண்டாம்.


ஒரு சில விசமிகள் தேவையற்ற அவதூறான பரப்புரையில் கிளம்பியுள்ளனர். தமிழ் மக்களுக்குக் காலங்காலமாக துரோகம் செய்து வருகின்ற ஒரு சில ஒட்டுப்படைக்கும்பல்கள் அரசுடன் இணைந்து கொண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் உடலை கைப்பற்றியிருப்பதாகவும் அவரது உடலம் கொழும்பிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பல பொய்யான தகவல்களை ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்திய அரசிற்குச் சார்பான ஒரு சில ஊடகங்கள் இச்செய்தியை மிகைப்படுத்தி எழுதுவதாக அங்கிருந்து கிடைத்த தகவல்களும் தெரிவிக்கின்றன. ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்கள் இன்னும் போர்ப்பிரதேசங்களில் உள்ளனர். அவர்களை ஒட்டுமொத்தமாக அழிப்பதே சிங்கள அரசின் திட்டம். வன்னித் தகவல்களின் படி இதுவரை 25000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பல்லாயிரக் கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் தொடர்ந்தும் கடும் சமர் நடந்து வருவதாகவும் தெரியவருகின்றது.

மேலும் இலங்கைத் தமிழர் பாதுகதப்பு இயக்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டள்ளதாவது:

மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவலத்தை மறைப்பதற்காகவே இலங்கை இனவெறி அரசு இப்படியான பொய்யான செய்திகளைப் பரப்பிவருகின்றது. இப்படியான பொய்ப் பரப்புரைகளை தயவுசெய்து யாரும் நம்பவேண்டாம். மக்களைக்காப்பாற்ற தலைவரின் நேரடி வழிகாட்டலின் கீழ் அனைத்து முன்னணித் தளபதிகளும் களத்தில் நின்று முனைப்புடன் போராடி வருகின்றனர்.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவலத்தை மறைப்பதற்காகவே இலங்கை இனவெறி அரசு இப்படியான பொய்யான செய்திகளைப் பரப்பிவருகின்றது. இப்படியான பொய்ப் பரப்புரைகளை தயவுசெய்து யாரும் நம்பவேண்டாம். மக்களைக்காப்பாற்ற தலைவரின் நேரடி வழிகாட்டலின் கீழ் அனைத்து முன்னணித் தளபதிகளும் களத்தில் நின்று முனைப்புடன் போராடி வருகின்றனர்.
சாவின் விளிம்பில் நிற்கும் மக்களைக் காப்பாற்ற இந்தக் கட்டத்திலாவது அனைத்துலகமும் ஐநாவும் முன்வர வேண்டும் என அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது.



சிறீலங்கா அரசு புலம்பெயர் மக்களின் போராட்டங்களை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.குறிப்பாக பொய்யான செய்திகளை அனைத்துலக ஊடகங்களுக்கு வழங்கி,அதனூடாக பெரும் இனப்படுகொலையினை வன்னியில் மேற்கொண்டு வருகின்றது.சிறீலங்கா அரசு ஆதாரம் ஒன்றும் இல்லாத செய்திகளையே வெளியிட்டு வருகின்றது.


இதனை நீங்கள் நம்பாது, ஆதாரமான செய்திகள் வரும் வரை காத்திருக்கவும்.


தமிழ்மக்களை குழப்பும் முயற்சியில் சிறீலங்கா அரசு முயற்சி செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது
thanks:
http://www.tamilseythi.com/tamilar/Events/note-2009-05-18.html
http://www.tamilseythi.com/tamileelam/parappurai_170509.html

Saturday, May 16, 2009


or copy the address in the field below to your podcast software:



தமிழக தேர்தல் முடிவுகள்;இயக்குனர் பாரதிராஜாவின் அலுவலகம் மீது தாக்குதல்![பிரித்தானிய நேரம் : May 16th, 2009 at 18:21]
தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இயக்குனர் பாரதிராஜாவின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வாகனம் மீது வந்த சிறிய கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.இதில் பாரதிராஜாவின் அலுவலகம் முற்றாக சேதமடைந்துள்ளது.

இயக்குனர் பாரதிராஜா ஈழத்தமிழர் மீதான தாக்குதல்களை கண்டித்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.(நன்றி:TNN)

Tuesday, May 12, 2009

s.p. kaliyamoorthy





thanks to : tamilaga arasial

Sunday, May 10, 2009

அனிதாப் பிரதாப்பின் அற்புதமான பேச்சு


Tuesday, May 5, 2009

'அனில் அம்பானி 'கொலை முயற்சி'
வழக்கில் புது திருப்பமாக ஏர் வொர்க்ஸ் நிறுவனத்தின் இரு ஊழியர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களின் பெயர் பால்ராஜ் தேவர் மற்றும் உதய் வாரேகர். இந்த இருவரும் ஏர் வொர்க்ஸின் தொழில்நுட்ப உதவியாளர்கள்
அம்பானியின் ஹெலிகாப்டரில் சிறு சிறு கூழாங்கற்களைக் கொட்டியதில் இந்த இருவருக்கும் முக்கியப் பங்கு இருக்கும் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருப்பதா மும்பை குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனத்திலிருந்து நேற்று நீக்கப்பட்ட விஜய் பட்னாகர் என்பவரையும் விசாரித்துள்ளது போலீஸ். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாகக் கருதப்பட்ட பரத் போர்ஜ் சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதே நிறுவனத்தின் மேலும் இரு ஊழியர்கள் கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருவாரங்களுக்கு முன் அனில் அம்பானி வழக்கமாகப் பயணிக்கும் ஹெலிகாப்டர், வழக்கமான பணிகளுக்காக ஏர்வொர்க்ஸ் நிறுவன வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த ஹெலிகாப்டரை இயக்க முற்படும்போது, அதன் பெட்ரோல் டேங்கில் கூழாங்கற்கள் மற்றும் மணல் கொட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வருகிறது போலீஸ்.
த‌மிழக‌த்து‌க்கு சோ‌னியா வரு‌ம் நா‌ள் து‌க்க நா‌ள் : பாரதிராஜா

இலங்கை பிரச்சனையில் மவுனம் சாதித்து வரும் சோனியாகாந்தி சென்னைக்கு ஓட்டு கேட்டு வரும்போது வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றுங்கள் என்று கூ‌றிய இய‌க்குன‌ர் பாரதிராஜா, சோனியா த‌மிழக‌த்து‌க்கு வரும்நாள் துக்க நாள் எ‌ன்று ஆவேசமாக பே‌சினா‌ர்.

திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பு திரைப்பட இய‌க்குன‌ர் பாரதிராஜா தலைமையில் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது என்று பிரசாரம் செய்யவது என்று இந்த இயக்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.அதன்படி நேற்‌றிரவு ஈரோடு ம‌க்களவை‌த் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக பிரசார கூட்டம் நடத்தப்பட்டது. ஈரோடு பெரியார் நகரில் நடந்த கூட்டத்துக்கு இய‌க்குன‌ர் பாரதிராஜா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகை‌யி‌ல், டெல்லி அரசு எனக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தது. பத்மஸ்ரீ பாரதிராஜாவா? தமிழன் பாரதிராஜாவா? என்ற கேள்வி வந்தபோது, தமிழன் பாரதிராஜா என்கிற பெருமை மட்டும் போதும் என்று முடிவு செய்தேன். தமிழன் என்பதற்கு இணையான வேறு பட்டமே கிடையாது.பாரதிராஜா யார் என்று வயலார் ரவிக்கு தெரியுமா? என்கிறார் இளங்கோவன். அவருக்கு தெரியுமா? நானும் வயலார் ரவியும் 25 ஆண்டுகால நண்பர்கள் என்று.
முத்துக்குமாரை தெரியாது என்கிறார். முத்துக்குமாரை தெரியாமல் தமிழன் இருக்கலாமா? அவருக்கு ஓடுவது தமிழ் ரத்தமா?.தனி ஈழம் என்று யார் குரல் கொடுத்தாலும் அவர்களை வாழ்த்துகிறோம். துரோகிகளை நாங்கள் அடையாளம் காட்டுகிறோம். நல்லவர்களை தேடிக்கொள்ளுங்கள்.16 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இப்போது புரட்சியை தொடங்கி இருக்கிறோம்.
இன்னும் 10 நாட்களில் தேர்தலில் அது பிரளயமாக மாறவேண்டும்.ஓட்டு கேட்க சோனியா வரக்கூடாது. அப்படி அவர் 6ஆ‌ம் தேதி சென்னைக்கு வந்தால் மிக பலத்த எதிர்ப்பு காட்ட வேண்டும்.

தாய்மார்களே பொதுமக்களே நீங்கள் உங்கள் வீடுகளில் கறுப்பு துணியை கட்டுங்கள். சிறு கறுப்பு துணியை அணிந்து கொள்ளுங்கள். யாராவது கேட்டால் சோனியா வரும்நாள் எங்கள் துக்க நாள் என்று கூறுங்கள் எ‌ன்று பாரதிராஜா பேசினார்.கூட்டத்தில் இயக்குனர்க‌ள் சீமான், ஆர்.சுந்தரராஜன், கவுதமன், ஆர்.கே.செல்வமணி உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக 'சீனாவின் முற்றுகையில் இந்தியா' என்ற புத்தகத்தை இயக்குனர் பாராதிராஜா வெளியிட்டார்.
thanks
www.yarl.com

Thursday, April 23, 2009

ஈழத் தமிழர்களை காப்பாற்றாத இந்திய அரசின் பத்மசிறீ விருது எனக்கு வேண்டாம்: பாரதிராஜா
[வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2009, 08:07 மு.ப ஈழம்] [தமிழ்நாடு நிருபர்]

ஆடியோ




இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்காத இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பத்மசிறீ விருதை திரும்ப ஒப்படைக்கப் போவதாக தமிழ் திரைப்படத்தின் இயக்குநர் இமயமான பாரதிராஜா அறிவித்திருக்கின்றார்.

இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் சென்னையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் முடிவில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
உலகிற்கே தமிழினத்தை அடையாளம் காட்டியவர் பிரபாகரன்தான். தமிழ் இனத்திற்காகவும், தமிழ் மக்களுக்காகவும் கடந்த 28 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
ஆனால் பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் வீழ்த்துவதற்காக இந்திய அரசு புறவழியில் உதவி செய்து வருகிறது. மத்தியில் அமைந்துள்ள ஆட்சியில் அதிகார நடுவமாக விளங்கும் ஒருவர் தமது கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக 3 ஆண்டுகளாக சிறிலங்கா அரசுக்குப் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார். அவரைப் பற்றி பேசக்கூடாது என்று தமிழக காவல்துறை தடை போடுகிறது. அவரைப் பற்றி பேசினால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. அப்படியானால் அவர்தான் தேசமா?.

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடும் பிரபாரனை தீவிரவாதி என்று கூறுகிறார்கள். அப்படியென்றால் இந்திய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை உள்ளிட்ட அனைவருமே தீவிரவாதிகள்தான்.

தமிழீழத்தில் பிச்சைக்காரர்களையே பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அங்குள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் அனைத்து வசதிகளையும் பிரபாகரன் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட தமிழினம் இன்று உணவுக்கும், மருந்துக்கும் கையேந்தி பிச்சை எடுக்கின்றது.
சிறிலங்கா அரசுக்கும் மத்திய எதிராக தமிழ் மக்களிடையே இப்போது ஏற்பட்டுள்ள எழுச்சி முன்பே ஏற்பட்டிருந்தால் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.

இலங்கையில் வாழும் எங்கள் சகோதரர்களைக் காப்பாற்ற முடியாத மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் அந்த அரசு எனக்கு அளித்த பத்மசிறீ விருதை திரும்ப ஒப்படைப்பேன் என்று பாரதிராசா அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பை பலரும் வரவேற்றனர். இயக்குநர் பாரதிராஜாவுக்கு 2004 ஆம் ஆண்டு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
thanks. ww.puthinam.com

Tuesday, April 21, 2009

vivek

[ செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2009, 09:21.50 AM GMT +05:30 ]


ஈழமக்களுக்காக பெண்கள் உண்ணாவிரதம் 9 வது நாளாக நீடிப்பு:

நடிகர் விவேக் வாழ்த்து


இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும் உடனடியாக போரை நிறுத்தும்படி சோனியாகாந்தியை வலியுறுத்தியும் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. அலுவலக வளாகத்தில் இன்று 9 வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது.

சாகும்வரை உண்ணா விரதம் இருக்கும் 20 பெண்களில் பலர் சோர்வாக காணப்பட்டனர். அவர்கள் பாயை விரித்து படுத்துக் கிடந்தனர். மருத்துவமனைக்கு செல்லவும் மறுத்து விட்டனர். உண்ணாவிரதம் இருந்த பெண்களை நடிகர் விவேக் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது




தமிழர்கள் ஈழ மண்ணில் படும் கஷ்டத்துக்காக நீங்கள் நடத்தும் போராட்டம் போற்றத்தக்கது. பொதுவாக பெண்மை வணங்கத்தக்கது. குழந்தைகள் பட்டினி கிடந்தால் கூட பெண்கள் தாங்கிக் கொள்ளமாட்டார்கள். தங்கள் குழந்தைகளையும் நினைக்காமல் இலங்கை தமிழர்களுக்காக பட்டினி போராட்டம் நடத்துவது நெகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர்கள் சார்பில் நன்றி கூறுகிறேன். நீங்கள் செய்திருப்பது மிகப்பெரிய தியாகம். ஒவ்வொரு தமிழர்களின் உணர்வையும் செயலாக்கி இருக்கிறீர்கள். எதையும் எதிர்பார்க்காமல் தியாக உணர்வோடு போராட்டம் நடத்துகிறீர்கள். இதன் மூலம் தமிழர்கள் வாழ்வில் விடியல் ஏற்படுமானால் அதற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். எந்த கட்சி சார்பும் இல்லாமல் தமிழர் என்ற முறையில் எனது ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு என்றார். பின்னர் உண்ணாவிரதம் இருந்த பெண்களுக்கு ஒரு அட்டைப்பெட்டி நிறைய தண்ணீர் பாட்டில்கள் வாங்கி கொடுத்தார்.

thanks..www.tamilwin.com